ஆசிய உள்விளையாட்டு அரங்க தடகளம்:3,000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கப் பதக்கம்


ஆசிய உள்விளையாட்டு அரங்க தடகளம்:3,000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கப் பதக்கம்
x
தினத்தந்தி 19 Sep 2017 5:03 PM GMT (Updated: 19 Sep 2017 5:03 PM GMT)

ஆசிய உள்விளையாட்டு அரங்க தடகளம் போட்டியில் 3,000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கப் பதக்கம் வென்றார்.

அஷ்காபாத், 

5–வது ஆசிய உள்விளையாட்டு அரங்க தடகளம் மற்றும் தற்காப்பு கலை போட்டி துர்க்மெனிஸ்தானில் நடந்து வருகிறது. இதில்  நடந்த ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் லட்சுமணன் 8 நிமிடம் 02.30 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் தட்டிச்சென்றார். சவுதிஅரேபியா வீரர் தாரிக் அகமது வெள்ளிப்பதக்கமும் (8 நிமிடம் 03.98 வினாடி), ஈரானின் கிஹானி உசேன் வெண்கலப்பதக்கமும் (8 நிமிடம் 07.09 வினாடி) பெற்றனர்.

Next Story