துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 20 Sep 2017 10:00 PM GMT (Updated: 20 Sep 2017 7:06 PM GMT)

* பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது, பேட்ஸ்மேன் காலித் லத்தீப் சூதாட்ட சர்ச்சையில் சிக்கினார்.

இது குறித்து விசாரணை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு கமிட்டி அவருக்கு 5 ஆண்டுகள் தடையும், ரூ.6 லட்சம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தது. 31 வயதான காலித் லத்தீப், பாகிஸ்தான் அணிக்காக 5 ஒரு நாள் போட்டி மற்றும் 13 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

* ஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து தொடரில் எய்பார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பார்சிலோனா 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி 4 கோல்கள் அடித்து அசத்தினார்.

* இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 28-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இலங்கை வீரர் மேத்யூஸ் பின்னங்கால் காயம் காரணமாக முதலாவது டெஸ்டில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை அணியில் சமரவிக்ரமா, ரோஷன் சில்வா ஆகிய புதுமுக பேட்ஸ்மேன்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

Next Story