புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் 14-வது தோல்வி


புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் 14-வது தோல்வி
x
தினத்தந்தி 13 Oct 2017 7:23 PM GMT (Updated: 13 Oct 2017 7:23 PM GMT)

12 அணிகள் இடையிலான புரோ கபடி லீக் தொடரில், லீக் சுற்று இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

புனே,

12 அணிகள் இடையிலான புரோ கபடி லீக் தொடரில், லீக் சுற்று இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்றிரவு புனேயில் நடந்த 122-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பாச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 44-22 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி 14-வது வெற்றியை பதிவு செய்தது.

அதைத் தொடர்ந்து நடந்த இன்னொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 34-30 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தியது. ஏற்கனவே ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை இழந்து விட்ட தமிழ் தலைவாஸ் அணி 21-வது லீக்கில் விளையாடி அதில் சந்தித்த 14-வது தோல்வி இதுவாகும்.

இன்றைய ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி), புனேரி பால்டன்-மும்பை (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story