சென்னை மாவட்ட சீனியர் கபடி போட்டி நாளை நடக்கிறது


சென்னை மாவட்ட சீனியர் கபடி போட்டி நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 10 Nov 2017 9:13 PM GMT (Updated: 10 Nov 2017 9:13 PM GMT)

கோல்டன் டிராகன் கபடி கிளப் சார்பில் 65–வது சென்னை மாவட்ட சீனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி

சென்னை,

கோல்டன் டிராகன் கபடி கிளப் சார்பில் 65–வது சென்னை மாவட்ட சீனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி நொச்சிக்குப்பத்தில் உள்ள சிங்காரவேலர் விளையாட்டு திடலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியை ஆர்.நடராஜ் எம்.எல்.ஏ.தொடங்கி வைக்கிறார். சென்னை மாவட்டத்தில் பதிவு செய்த கபடி அணிகள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும். வீரர்கள் 85 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த போட்டியின் அடிப்படையில் அரியலூரில் வருகிற 24–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை நடைபெறும் மாநில சீனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான சென்னை மாவட்ட அணி தேர்வு செய்யப்படும். இந்த தகவலை சென்னை மாவட்ட கபடி சங்க செயலாளர் கோல்டு எம்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story