உலக பெண்கள் இளையோர் குத்துச்சண்டை போட்டி கவுகாத்தியில் இன்று தொடக்கம்


உலக பெண்கள் இளையோர் குத்துச்சண்டை போட்டி கவுகாத்தியில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 18 Nov 2017 9:30 PM GMT (Updated: 18 Nov 2017 6:51 PM GMT)

5-வது உலக பெண்கள் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் இன்று தொடங்குகிறது.

கவுகாத்தி,

இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் இந்த போட்டியில் இந்திய தரப்பில் நீது (48 கிலோ), ஜோதி (51 கிலோ), சாக்‌ஷி (54 கிலோ), ஷாஷி சோப்ரா (57 கிலோ), அனுபமா (81 கிலோ), நேஹா யாதவ்(81 கிலோவுக்கு மேல்), வன்லால்ரியாபுய் (60 கிலோ), ஆஷ்தா பாவா (69 கிலோ), நிஹாரிகா கோனெல்லா (75 கிலோ), அன்குஷிதா போரோ (64 கிலோ) ஆகிய 10 வீராங்கனைகள் களம் இறங்க உள்ளனர்.

இந்த போட்டியில் இந்திய அணி 2011-ம் ஆண்டுக்கு பிறகு தங்கம் வென்றதில்லை. அந்த நீண்ட கால ஏக்கத்துக்கு இந்திய வீராங்கனைகள் விடைகொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. “நமது வீராங்னைகள் நல்ல நிலையில் உள்ளனர்.

கணிசமான எண்ணிக்கையில் பதக்கங்களை வெல்வார்கள் என்று நம்புகிறோம்” என்று இந்திய பயிற்சியாளர் பெர்ஜிமாஸ்கோ ரபெல் தெரிவித்தார்.

Next Story