துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 4 Jan 2018 8:30 PM GMT (Updated: 4 Jan 2018 8:28 PM GMT)

ரஞ்சி கோப்பை உள்பட தேசிய போட்டிகளில் விளையாட பீகார் கிரிக்கெட் சங்க அணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

* ரஞ்சி கோப்பை உள்பட தேசிய போட்டிகளில் விளையாட பீகார் கிரிக்கெட் சங்க அணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. பீகார் கிரிக்கெட் அணி 17 ஆண்டுகளாக மேற்கண்ட போட்டிகளில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

*ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*சிட்னியில் நேற்று தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆ‌ஷஸ் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

*20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் காலின் முன்ரோவும் (நியூசிலாந்து), பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் சோதியும் (நியூசிலாந்து) முதலிடத்துக்கு முன்னேறியுள்ளனர்.

*இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கொச்சியில் அரங்கேறிய கேரளா பிளாஸ்டர்ஸ்– புனே சிட்டி இடையிலான 38–வது லீக் ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. புனே அணியில் மார்சிலோ பெரேராவும் (33–வது நிமிடம்), கேரளா அணியில் மார்க் சிப்னியோசும் (73–வது நிமிடம்) கோல் போட்டனர். முன்னதாக நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா–கோவா அணிகள் இடையிலான ஆட்டமும் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.


Next Story