சிட்னி சர்வதேச டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா ஜோடி


சிட்னி சர்வதேச டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா ஜோடி
x
தினத்தந்தி 12 Jan 2017 11:15 PM GMT (Updated: 12 Jan 2017 7:53 PM GMT)

சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்ரேலியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா

சிட்னி,

– பார்போரா ஸ்டிரிகோவா (செக்குடியரசு) ஜோடி 6–1, 6–2 என்ற செட் கணக்கில் வானியா கிங் (அமெரிக்கா)– ஷிவ்டோவா (கஜகஸ்தான்) இணையை 51 நிமிடங்களில் பந்தாடியது. கடந்த வாரம் பிரிஸ்பேன் டென்னிசில் அமெரிக்காவின் பெதானியுடன் இணைந்து பட்டத்தை வென்ற சானியா மிர்சா, இப்போது சிட்னி போட்டியில் ஸ்டிரிகோவாவுடன் கைகோர்த்து இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறார். சானியா– ஸ்டிரிகோவா இணை மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் டைமியா பாபோஸ் (ஹங்கேரி)– அனஸ்டசியா பாவ்லிசென்கோவா (ரஷியா) ஜோடியை எதிர்கொள்கிறது.

ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டங்களில் ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) 6–2, 6–2 என்ற நேர் செட்டில் பவுச்சார்ட்டையும் (கனடா), அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து) 6–1, 6–2 என்ற நேர் செட்டில் பார்போரா ஸ்டிரிகோவாவையும் (செக்குடியரசு) வீழ்த்தினர்.


Next Story