ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கடினமான சுற்றில் செரீனா


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கடினமான சுற்றில் செரீனா
x
தினத்தந்தி 13 Jan 2017 9:00 PM GMT (Updated: 13 Jan 2017 4:58 PM GMT)

ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை மறுதினம் தொடங்குகிறது.

மெல்போர்ன், 

ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை மறுதினம் தொடங்குகிறது. இதில் யார்–யாருடன் மோதுவது என்பதை நிர்ணயிக்கும் குலுக்கல் (டிரா) நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீரர் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே முதல் சுற்றில் 93–ம் நிலை வீரரான உக்ரைனின் மார்சென்கோவை சந்திக்கிறார். நடப்பு சாம்பியனும், 2–ம் நிலை வீரருமான செர்பியாவின் ஜோகோவிச், அபாயகரமான வீரர்களில் ஒருவரான பெர்னாண்டோ வெர்டஸ்கோவுடன் (ஸ்பெயின்) மோதுகிறார். முன்னாள் சாம்பியன் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், தகுதி நிலை வீரரை எதிர்கொள்ள இருக்கிறார். பெடரர், கால்இறுதியில் முர்ரேவை எதிர்கொள்ள நேரிடலாம்.

பெண்கள் ஒற்றையரில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், தனது முதல் சவாலை லெசியா சுரங்கோவுடன் (உக்ரைன்) தொடங்குகிறார். அதே சமயம் 23–வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கு குறி வைத்திருக்கும் அமெரிக்க ஜாம்பவான் செரீனாவுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது. அவர் முன்னாள் 7–ம் நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிச்சுடன் கோதாவில் குதிக்கிறார்.


Next Story