வரி ஏய்ப்பு செய்ததாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு சம்மன்


வரி ஏய்ப்பு செய்ததாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு சம்மன்
x
தினத்தந்தி 9 Feb 2017 9:17 PM GMT (Updated: 9 Feb 2017 9:17 PM GMT)

வரி ஏய்ப்பு செய்ததாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு சம்மன்

ஐதராபாத்,

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் உள்பட பல்வேறு சர்வதேச பட்டங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகிறார். இந்த நிலையில் வரி ஏய்ப்பு செய்ததாக சானியா மிர்சாவுக்கு, மத்திய சேவை வரித்துறையின் ஐதராபாத் மண்டல தலைமை கமிஷனர் சம்மன் அனுப்பி இருக்கிறார். அதில் பணம் செலுத்த தவறியது மற்றும் சேவை வரி ஏய்ப்பு செய்த விவகாரம் தொடர்பாக உங்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டி இருக்கிறது. எனவே நீங்களோ (சானியா மிர்சா) அல்லது உங்களது அங்கீகாரம் பெற்ற பிரதிநிதியோ வருகிற 16-ந் தேதி எங்கள் அலுவகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், விசாரணையின் போது தகுந்த ஆவணங்களை கொண்டு வர வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சானியா தரப்பில் ஆஜராக தவறினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டில் தெலுங்கானா அரசின் தூதராக இருக்க சானியா மிர்சா ரூ.1 கோடி பெற்றார். அதற்கு அவர் 14.5 சதவீதம் சேவை வரி செலுத்த வேண்டும். ஆனால் அவர் அதற்கு சேவை வரி எதுவும் செலுத்தவில்லை. இதனால் உரிய காலத்தில் வரியை கட்டாததால் வட்டி மற்றும் அபராதத்துடன் வரித்தொகையை செலுத்த வேண்டும் என்று கூறி அவருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. இது குறித்து சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சாவிடம் கருத்து கேட்ட போது, ‘சேவை வரி துறையினரை எங்கள் தரப்பு பிரதிநிதி குறிப்பிட்ட தேதியில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்’ என்று தெரிவித்தார். 

Next Story