வரி ஏய்ப்பு விவகாரம்: சானியா மிர்சா நேரில் ஆஜராகவில்லை


வரி ஏய்ப்பு விவகாரம்: சானியா மிர்சா நேரில் ஆஜராகவில்லை
x
தினத்தந்தி 14 Feb 2017 8:57 PM GMT (Updated: 14 Feb 2017 8:57 PM GMT)

தெலுங்கானா அரசின் தூதராக 2014–ம் ஆண்டு நியமிக்கப்பட்ட இந்திய டென்னிஸ் வீராங்கனைக்கு மாநில அரசு ரூ.1 கோடி ஊக்கத்தொகையாக வழங்கியது. இந்த தொகைக்கு சானியா மிர்சா சேவை வரி எதுவும் செலுத்தவில்லை. இதனை அடுத்து மத்திய சேவை வரித்துறையின் ஐதராபாத் மண்டல முதன்மை கமி

ஐதராபாத்,

தெலுங்கானா அரசின் தூதராக 2014–ம் ஆண்டு நியமிக்கப்பட்ட இந்திய டென்னிஸ் வீராங்கனைக்கு மாநில அரசு ரூ.1 கோடி ஊக்கத்தொகையாக வழங்கியது. இந்த தொகைக்கு சானியா மிர்சா சேவை வரி எதுவும் செலுத்தவில்லை. இதனை அடுத்து மத்திய சேவை வரித்துறையின் ஐதராபாத் மண்டல முதன்மை கமி‌ஷனர் அலுவலகம் சார்பில் சானியா மிர்சாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் சேவை வரி ஏய்ப்பு விசாரணைக்காக வருகிற 16–ந் தேதி (நாளை) சானியா மிர்சாவோ அல்லது அவரது பிரதிநிதியோ உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க சானியா மிர்சா செல்வதால் அவரால் இந்த விசாரணைக்கு நேரில் ஆஜராக இயலவில்லை என்றும், தனக்கு பதிலாக பிரதிநிதி ஒருவர் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என்றும் சானியா மிர்சா தரப்பில் மத்திய சேவை வரித்துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.


Next Story