மியாமி டென்னிஸ்: ஒலிம்பிக் சாம்பியன் மோனிகா தோல்வி


மியாமி டென்னிஸ்: ஒலிம்பிக் சாம்பியன் மோனிகா தோல்வி
x
தினத்தந்தி 23 March 2017 11:00 PM GMT (Updated: 23 March 2017 7:22 PM GMT)

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

மியாமி,

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் ரியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரானமோனிகா பிய்க் (பியூர்டோரிகோ), சோரனா கிர்ஸ்டியாவை (ருமேனியா) எதிர்கொண்டார். 69 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் சோரனா 6–2, 6–4 என்ற நேர் செட்டில் மோனிகாவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் கனடா இளம் வீராங்கனை பவுச்சார்ட் 4–6, 7–5, 3–6 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டியிடம் போராடி தோல்வி கண்டார்.

ஆண்கள் பிரிவில் கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), ஜெரிமி சார்டி (பிரான்ஸ்) பாபியோ போக்னினி (இத்தாலி), பெனோய்ட் பேர் (பிரான்ஸ்), துடி செலா (இஸ்ரேல்) உள்ளிட்டோர் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர். ரோஜர் பெடரர், வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால்(ஸ்பெயின்), நிஷிகோரி (ஜப்பான்), மரின் சிலிச் (குரோஷியா), மிலோஸ் ராவ்னிக் (கனடா), டொமினிக் திம் (ஆஸ்திரியா) போன்ற நட்சத்திர வீரர்கள் ‘பை’ சலுகை மூலம் நேரடியாக 2–வது சுற்றில் விளையாட உள்ளனர்.


Next Story