மான்ட்கார்லோ டென்னிஸ்: கால்இறுதியில் மரின் சிலிச் தோல்வி


மான்ட்கார்லோ டென்னிஸ்: கால்இறுதியில் மரின் சிலிச் தோல்வி
x
தினத்தந்தி 21 April 2017 9:00 PM GMT (Updated: 21 April 2017 8:05 PM GMT)

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.

மான்ட்கார்லோ,

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 24-வது இடத்தில் இருக்கும் ஆல்பர்ட் ரமோஸ் வினோலாஸ் (ஸ்பெயின்), 8-ம் நிலை வீரர் மரின் சிலிச்சை (குரோஷியா) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆல்பர்ட் ரமோஸ் 6-2, 6-7 (5-7), 6-2 என்ற செட் கணக்கில் மரின் சிலிச்க்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால்இறுதியில் லூகாஸ் போவ்லி (பிரான்ஸ்) 6-0, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் 27-ம் நிலை வீரர் பாப்லோ கியூவாஸ்சை (உருகுவே) தோற்கடித்து அரைஇறுதியை எட்டினார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-பாப்லோ கியூவாஸ் (உருகுவே) ஜோடி 6-7, 6-4, 10-6 என்ற செட் கணக்கில் ராவென் கிளாசென்(தென்ஆப்பிரிக்கா)-ராஜீவ் ராம் (அமெரிக்கா) இணையை வெளியேற்றி கால்இறுதிக்கு தகுதி பெற்றது. 

Next Story