15 மாத கால தடைக்கு பிறகு இன்று களம் இறங்குகிறார், ‌ஷரபோவா


15 மாத கால தடைக்கு பிறகு இன்று களம் இறங்குகிறார், ‌ஷரபோவா
x
தினத்தந்தி 25 April 2017 8:13 PM GMT (Updated: 25 April 2017 8:12 PM GMT)

ஸ்டட்கர்ட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இப்போது அனைவரது கவனமும் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை மரிய ‌ஷரபோவா (ரஷியா) மீது தான் உள்ளது.

ஸ்டட்கர்ட்,

ஸ்டட்கர்ட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இப்போது அனைவரது கவனமும் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை மரிய ‌ஷரபோவா (ரஷியா) மீது தான் உள்ளது. ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 15 மாத கால தடையை அனுபவித்த பிறகு 30 வயதான ‌ஷரபோவா களம் காணும் முதல் போட்டி இதுவாகும்.

‘வைல்டு கார்டு’ சலுகை மூலம் நேரடியாக இந்த போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ள 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ‌ஷரபோவா முதல் சுற்றில் இத்தாலியின் ராபர்ட்டா வின்சியை இன்று (புதன்கிழமை) எதிர்கொள்கிறார்.

ராபர்ட்டா வின்சி கூறுகையில், ‘‌ஷரபோவாவுக்கு, ‘வைல்டு கார்டு’ சலுகை வழங்கப்பட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஊக்கமருந்து பயன்படுத்தி அதற்குரிய தண்டனையை அனுபவித்து இருக்கிறார். தடை காலத்திற்கு பிறகு அவர் மீண்டும் விளையாடலாம். ஆனால் எந்த வித ‘வைல்டு கார்டு’ உதவியும் இன்றி (அதாவது தகுதி சுற்றில் விளையாடி அதன் மூலம் பிரதான சுற்றுக்கு வர வேண்டும்) விளையாட வேண்டும். அனேகமாக 2 அல்லது 3 தொடர்களில் அவர் விளையாடினால் தரவரிசையில் 30 இடத்திற்குள் வந்து விடுவார். நிறைய வீராங்கனைகளுக்கு அவருக்கு வைல்டு கார்டு வழங்கியதில் அதிருப்தி இருக்கிறது’ என்றார்.

இதற்கிடையே, பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் பிரதான சுற்றில் நேரடியாக ஆடுவதற்குரிய வைல்டு கார்டு ‌ஷரபோவாவுக்கு வழங்கப்படாது என்றும், அவர் தகுதி சுற்றில் விளையாடுவதற்கு வைல்டு கார்டு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story