குயின்ஸ் கிளப் டென்னிஸ் முதல் சுற்றில் டிமித்ரோவ் வெற்றி


குயின்ஸ் கிளப் டென்னிஸ் முதல் சுற்றில் டிமித்ரோவ் வெற்றி
x
தினத்தந்தி 19 Jun 2017 9:45 PM GMT (Updated: 19 Jun 2017 8:36 PM GMT)

குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

லண்டன்,

நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் செக் குடியரசு வீரர் தாமஸ் பெர்டிச் 7–5, 6–3 என்ற நேர்செட்டில் பெல்ஜியம் வீரர் ஸ்டீவ் டார்சிலை தோற்கடித்து 2–வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் பல்கேரியா வீரர் டிமித்ரோவ் 6–3, 6–1 என்ற நேர்செட்டில் அமெரிக்க வீரர் ரையான் ஹாரிச்சனை வீழ்த்தினார். இன்னொரு ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் சோங்கா 6–2, 6–2 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் அட்ரியன் மன்னரிலோவை சாய்த்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜப்பான் வீராங்கனை நயோமி ஒசாகா 6–1, 2–6, 7–6 (7–4) என்ற செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனை லாரென் டேவிஸ்சை வீழ்த்தினார்.


Next Story