ஹலே ஓபன்: ஸ்வரேவை வீழ்த்தி சாம்பியன் ஆனார் பெடரர்


ஹலே ஓபன்: ஸ்வரேவை வீழ்த்தி சாம்பியன் ஆனார் பெடரர்
x
தினத்தந்தி 26 Jun 2017 6:55 AM GMT (Updated: 26 Jun 2017 6:55 AM GMT)

ஹலே ஓபன் போட்டியின் இறுதி போட்டியில் ஸ்வரேவை வீழ்த்தி 9 வது முறையாக சாம்பியன் ஆனார் பெடரர்

ஹலே,

ஜெர்மெனியின் ஹலே நகரில் 25 வது ஹலே ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இறுதி போட்டியில் தரவரிசையில் ஐந்தாம் இடத்தில் உள்ள ரோஜர் பெடரரும் ஜெர்மெனியின் அலெக்ஸாண்டர் ஸ்வரேவும் மோதினர். இது பெடரர் பங்குபெறும் 11 வது ஹலே ஓபன் இறுதி போட்டியாகும்.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய பெடரர் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டின் முடிவில் 6-1 என்ற புள்ளி அடிப்படையில் முன்னிலை பெற்றார்.

இரண்டாவது செட்டை கைப்பற்ற ஸ்வரேவ் கடுமையாக போராடினார். ஆனாலும் பெடரர் தனது திறமையான ஆட்டத்தின் மூலம் 6-3 என்ற புள்ளி அடிப்படையில் ஸ்வரேவை வீழ்த்தி 9 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

Next Story