சீன ஓபன் டென்னிஸ்: நடால், கார்சியா ‘சாம்பியன்’


சீன ஓபன் டென்னிஸ்: நடால், கார்சியா ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 8 Oct 2017 9:45 PM GMT (Updated: 8 Oct 2017 5:54 PM GMT)

சீன ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்தது.

பீஜிங்,

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 6–2, 6–1 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோசை துவம்சம் செய்து, சீன ஓபன் பட்டத்தை 2–வது முறையாக வசப்படுத்தினார். ஏற்கனவே 2005–ம் ஆண்டிலும் இங்கு வாகை சூடியிருந்தார். மொத்தத்தில் அவரது 75–வது பட்டம் இதுவாகும்.

பெண்கள் ஒற்றையரில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா 6–4, 7–6 (3) என்ற நேர் செட்டில் சிமோனா ஹாலெப்புக்கு (ருமேனியா) அதிர்ச்சி அளித்து பட்டத்தை உச்சிமுகர்ந்தார். இந்த வெற்றியின் மூலம் கார்சியா தரவரிசையில் 15–வது இடத்தில் இருந்து 9–வது இடத்தை பிடிக்கிறார். தோல்வி அடைந்தாலும் ஹாலெப், இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் ‘நம்பர் ஒன்’ அரியணையில் அமருகிறார்.

பெண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியனான மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து)– சான் யங் ஜான் (சீனத்தைபே) ஜோடி 6–1, 6–4 என்ற நேர் செட்டில் டைமியா பபோஸ் (ஹங்கேரி)– ஆன்ட்ரியா ஹவக்கோவா (செக்குடியரசு) இணையை தோற்கடித்து பட்டத்தை கைப்பற்றியது.


Next Story