ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர்–நடால்


ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர்–நடால்
x
தினத்தந்தி 14 Oct 2017 9:45 PM GMT (Updated: 14 Oct 2017 8:14 PM GMT)

ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

ஷாங்காய்,

நேற்று நடந்த ஒரு அரை இறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 7–5, 7–6 (3) என்ற நேர் செட் கணக்கில் மரின் சிலிச்சை (குரோஷியா) தோற்கடித்தார்.மற்றொரு ஆட்டத்தில் 2–ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 3–6, 6–3, 6–3 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோவை வீழ்த்தினார்.

இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் பரம போட்டியாளர்களான நடால்–பெடரர் மல்லுகட்டுகிறார்கள். இருவரும் இதுவரை 37 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் பெடரர் 14 ஆட்டத்திலும், நடால் 23 ஆட்டத்திலும் வெற்றி கண்டுள்ளனர். ஆனால் இந்த ஆண்டில் இருவரும் சந்தித்த 3 ஆட்டங்களிலும் பெடரரே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story