ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா


ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
x
தினத்தந்தி 15 Oct 2017 11:00 PM GMT (Updated: 15 Oct 2017 8:35 PM GMT)

டியான்ஜின் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில்

முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை மரிய ஷரபோவா (ரஷியா) 7-6, 7-6 (10-8) என்ற நேர் செட்டில் அரினா சபலென்காவை (பெலாரஸ்) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இரண்டு செட்டிலும் தொடக்கத்தில் 1-4 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கினாலும் அதன் பிறகு சரிவை சமாளித்து மீண்ட ஷரபோவா இந்த வெற்றிக்காக 2 மணி 5 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.

ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 15 மாதங்கள் தடையை அனுபவித்து கடந்த ஏப்ரல் மாதம் மறுபடியும் களம் திரும்பிய ஷரபோவா அதன் பிறகு ருசித்த முதல் பட்டம் இதுவாகும். மொத்தத்தில் அவருக்கு இது 36-வது சர்வதேச பட்டமாகும். 30 வயதான ஷரபோவா அடுத்து சொந்த மண்ணில் நடக்கும் கிரம்ளின் கோப்பை டென்னிசில் பங்கேற்க உள்ளார்.

Next Story