.
சற்று முன் :
ராமநாதபுரத்தில் ராகுல்காந்தி இன்று பிரசாரம் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ராகுல்காந்தியால் நாட்டை வழிநடத்த முடியுமா? நரேந்திர மோடி கேள்வி
மத்தியில் 3–வது அணி ஆட்சி அமைக்கும் பிரகாஷ் கரத்

Advertisement

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

சென்னை,

ஆசிரியர் தகுதித்தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

போராட்டம்

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் மற்றும் மறியல் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

பார்வையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகள் ஏற்க முடியாதவையோ அல்லது அதிக செலவு பிடிப்பவையோ அல்ல. பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களை பார்வையற்றவர்களுக்கு மட்டும் 60 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக குறைக்க வேண்டும் – மற்ற அரசு வேலைவாய்ப்புகளில் பார்வையற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது தான்.

தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க வேண்டும்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் சமூகச் சூழலுக்கு ஏற்ற வகையில் தேர்ச்சி மதிப்பெண்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி ஆந்திராவில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேர்ச்சி மதிப்பெண்ணாக 35 சதவீதம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் தமிழ்நாட்டிலும் தேர்ச்சி மதிப்பெண்களை குறைப்பதில் சட்ட சிக்கலோ அல்லது வேறு பிரச்சினையோ ஏற்படப் போவதில்லை. வாழ்வாதாரம் கோரி போராடும் பார்வையற்ற பட்டதாரிகள் மற்றும் மாணவர்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடனடியாக அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

category:

News Group Category:

தொடர்புடைய செய்திகள்

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read