.
சற்று முன் :
என் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பின்னால் பாரதீய ஜனதா உள்ளது: அரவிந்த் கெஜ்ரிவால்
ராகுல் காந்திக்கு ஆதரவாக அமேதி தொகுதியில் சோனியா காந்தி இன்று பிரச்சாரம்
சாந்தன், முருகன், பேரறிவாளன் வழக்கில் 25-ந் தேதிக்குள் தீர்ப்பு தலைமை நீதிபதி பி.சதாசிவம்
இந்த தேர்தலில் தி.மு.க. 3–வது இடத்துக்கு தான் வரும் மு.க.அழகிரி

Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் 5–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5–ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 5–ந்தேதி தொடங்கி 13–ந்தேதி வரை 9 நாட்கள் வெகுவிமரிசையாக நடக்கிறது. அதையொட்டி 5–ந்தேதி மாலை கொடியேற்றமும், இரவு பெரிய சேஷ வாகன ஊர்வலமும் நடக்கிறது.

6–ந்தேதி காலை சின்ன சேஷ வாகன ஊர்வலம், இரவு அம்ச வாகன ஊர்வலம், 7–ந்தேதி காலை சிம்ம வாகன ஊர்வலம், இரவு முத்துப்பந்தல் வாகன ஊர்வலம், 8–ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன ஊர்வலம், இரவு சர்வ பூபால வாகன ஊர்வலம் நடக்கிறது.

‘சிகர’நிகழ்ச்சியான கருட சேவை

9–ந்தேதி காலை மோகினி அவதார வாகன ஊர்வலமும், இரவு பிரம்மோற்சவ விழாவின் ‘சிகர’ நிகழ்ச்சியான கருட சேவை உற்சவமும் நடக்கிறது. உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகள், விலை உயர்ந்த பட்டு வஸ்த்திரங்கள், பல வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வரும் கண் கொள்ளா நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குழுமியிருப்பார்கள்.

மலையப்பசாமி ஊர்வலத்தின் போது நான்குமாட வீதிகளில் கேலரிகளில் அமர்ந்திருக்கும் பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என எழுப்பும் பக்தி கோஷம் விண்ணை அதிர வைக்கும்.

தேரோட்டம்

அதைத்தொடர்ந்து 10–ந்தேதி காலை அனுமந்த வாகன ஊர்வலம், இரவு யானை வாகன ஊர்வலம், 11–ந்தேதி காலை சூரிய பிரபை வாகன ஊர்வலம், இரவு சந்திர பிரபை வாகன ஊர்வலம், 12–ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

புதிதாக தங்கத்தால் தயாரிக்கப்பட்ட தேர் நான்கு மாட வீதிகளில் வலம் வரும் என பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதைத்தொடர்ந்து இரவு குதிரை வாகன ஊர்வலம், 13–ந்தேதி சக்கர ஸ்நானமும், கொடியிறக்கமும் நடக்கிறது. முன்னதாக, 4–ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.

மின்விளக்கு அலங்காரம்

பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி, திருமலை பகுதிகளில் மின்விளக்கு அலங்காரம் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கோவிலின் நான்கு மாட வீதிகள், திருமலையில் உள்ள முக்கிய வீதிகள், திருப்பதியில் இருந்து திருமலை வரையிலும், திருப்பதியில் இருந்து திருச்சானூர் வரையிலும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்படுகிறது.

ஏழுமலையான், பத்மாவதி தாயார் உருவங்கள் மின் விளக்குகளால் வடிவமைக்கப்பட்டு உள்ளன. மின் விளக்கு அலங்காரம் செய்யும் பணிகளை தேவஸ்தான என்ஜினீயரிங் துறை அதிகாரிகள் நேரடி மேற்பார்வையில் மின் விளக்குகள் அனைத்தும் சரியாக ஒளிர்கிறதா என சோதனை நடந்து வருகிறது.

category:

News Group Category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read