.
சற்று முன் :
சாந்தன், முருகன், பேரறிவாளன் வழக்கில் 25-ந் தேதிக்குள் தீர்ப்பு தலைமை நீதிபதி பி.சதாசிவம்
இந்த தேர்தலில் தி.மு.க. 3–வது இடத்துக்கு தான் வரும் மு.க.அழகிரி
சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில்கள் சேவை 20-ந்தேதி குறைப்பு
தமிழகம் முழுவதும் நாளை 1 மணி நேரம் ரெயில்வே டிக்கெட் வினியோகம் ரத்து
நான் பிரதமர் ஆனால் மம்தா அரசின் ஒத்துழைப்பு கிடைக்கும் -மோடி
முலாயம்சிங்குக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு
புது டைரக்டர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது கருணாநிதி
ஆட்சியை பிடிப்பதற்காக பாரதீய ஜனதா வதந்திகளை பரப்பி வருகிறது சோனியா குற்றச்சாட்டு
இந்தியா இதுபோன்ற ஊழல் மற்றும் திமிரான அரசை பார்த்தது இல்லை காங்கிரஸ் மீது மோடி தாக்கு

Advertisement

திருவரன்குளம் அரன்குளநாதர்

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

‘சோழ நாட்டில் உள்ள வல்லம் என்ற நகரத்தை கல்மாஷபாதன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். சிறந்த குணநலன்களை கொண்ட இந்த மன்னனுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் கழித்தும் மகப்பேறு வாய்க்கவில்லை. இதனால் அவன் பெரிதும் வருந்தினான்.

தனது குலகுருவான சாண்டல்யர் எனும் முனிவரை அழைத்து தனது குறைதீர்ந்திட வழிகாட்டுமாறு வேண்டினான். சாண்டல்யர் தனது ஞான கண்களால் மன்னனின் பூர்வஜென்ம பாவத்தை உணர்ந்து அதனை எடுத்துக்கூறி பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவத்தல யாத்திரை செய்து சிவபெருமானை வழிபட்டு பூஜிக்குமாறு கூறினார்.

அகத்தியரை சந்தித்த அரசன்

குலகுருவின் சொற்களை சிரமேற்கொண்ட கல்மாஷபாதன் தனது மனைவியாகிய பாண்டிய குமாரியுடன் சிவத்தல யாத்திரை புறப்பட்டான். பல்வேறு தலங்களை வழிபட்டு தீர்த்தங்களில் மூழ்கி சிவத்தியானம் செய்தான். பின்னர் அகத்தியரது ஆசிரமத்தை அடைந்து தன் குறைநீங்கும் வண்ணம் சிவபூஜை செய்ய தக்க திருத்தலத்தை குறிப்பிட வேண்டும் என கேட்டான்.

அதற்கு அகத்தியர், ‘அரசே! வெள்ளாற்றின் வடகரையில் திவ்யலிங்கமாக விளங்கும் திருவரன்குளம் என்ற புண்ணிய ஷேத்திரம் உள்ளது. அங்கு சென்று சிவனை பூஜித்து போற்றுவாயாக’ என்றார். மேலும் அந்த புண்ணிய தலத்தின் வரலாற்றையும் கூறலானார்.

சிறந்த சிவ தலம்

ஒரு முறை பிரம்மதேவன் அழைப்பின்பேரில் சகல முனிவர்களும் சத்தியலோகம் சென்றோம். அப்போது நாரதர் பிரம்மனை பார்த்து ‘தந்தையே! சிவபெருமான் எந்த மூர்த்தி வடிவத்தில் அனைவராலும் பூஜிக்க தக்கவராக விளங்குகின்றார்? எந்த தலத்தில் பூரணாம்சத்தோடு அருள் செய்கிறார்?’ என்று கேட்டார்.

‘சிவத்தலங்கள் எல்லாவற்றிலும் அதிக புண்ணியம் அளிக்க வல்லது திருவரன்குளமேயாகும். அந்த தலத்தில் உலகநாதனான சிவத்தை பூஜை செய்வோன் பிறப்பு இல்லாததாகிய சிவபதத்தை அடைவான்’ என்று பிரம்மதேவர் விரித்துரைத்தார்.

சிவகணத்திற்கு சாபம்

புஷ்பதந்தன் என்பவன் சிவகணத்துள் ஒருவன். பெருமானுக்கு குடை பிடிக்கும் பணியை உவப்புடன் செய்பவன். கரத்தில் குடை தாங்கி பரமசிவத்தை பின்பற்றி பணிவிடை செய்து வந்தான். சிவபெருமான் உமாதேவியுடன் உலக சஞ்சாரம் செய்து கந்தர்வ உலகத்திற்கு செல்லும்போது வழியில் மஞ்சுவாணி எனும் பேரழகியை கண்டான் புஷ்பதந்தன்.

அவளது எழிலில் மயங்கி, மோகம் மிகுந்து தன் பணி மறந்து மரமென நின்றான். அதைக்கண்டு சினங்கொண்ட சிவபெருமான், அவனை பூமியில் வேப்ப மரமாகுமாறு சாபமிட்டார். தன் தவறை உணர்ந்து வருந்திய புஷ்பதந்தன் சிவனின் திருவடிகளில் விழுந்து பணிந்து வேண்டினான். மனம் குளிர்ந்த சிவபெருமான், ‘புஷ்பதந்தா, நமது பெயர் பூண்ட ஒரு திருக்குளம் உண்டாக்குவோம். அதன் கரையில் நமது ஆணைப்படி நீ வேப்ப மரம் ஆவாய். நாமும் அந்த நிழலில் வாசம் செய்வோம்.

பாவம் போக்கும் தலம்

ஹரதீர்த்தத்தில் எவன் நீராடுகிறானோ அவன் பிறவி தளையற்று புண்ணியம் அடைந்து முத்தி பெறுவான். இத்தீர்த்தம் பஞ்சமா பாதகங்களை போக்கி சிவலோகத்தை அளிக்கும். ஏதோ ஒரு காரணத்தால் அதில் ஒருமுறை மூழ்கியவன் யோகியர் பெறக்கூடிய அழியாத சாலோக பதவியை அடைவான். நீ விரைந்து அங்கு செல்வாய்.

நீ கிருதயுகத்தில் வேப்பமரமாகவும், திரேதாயுகத்தில் பொற்பனையாகவும், கலியுகத்தில் அந்த பொன்பனைப்பழத்தால் கிடைத்த பொருளால் ஏற்படுத்திய மண்டபம், கோபுரம், பிரகாரம் முதலிய வடிவமாயிருந்து நமக்கு நிழலை செய்வாய். கலியில் கண்ணுக்கு புலப்படாத வடிவுபெற்று வசிப்பாய்’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.

லிங்கத்தை காண முடியவில்லை

அகத்தியர் கூறிய கதையைக் கேட்டதும் அவரிடம் இருந்து விடைபெற்று அரன்குளநாதர் ஆலயத்தை அடைந்தான் கல்மாஷபாதன். பல இடங்களில் சுற்றி திரிந்து அரிய சிவலிங்கத்தை தேடலுற்றான். ஆற்றல்மிக்க அவ்வரசன் பலநாள் முயன்றும் சிவலிங்கம் இருக்கும் இடம் தெரியவில்லை.

அப்போது ஒரு பெட்டியை தன் தலைமீது சுமந்து வரும் வேடன் ஒருவனை கண்டான். அவனை அணுகி, ‘நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? பெட்டியில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டான்.

‘ஐயா, இப்பெட்டியில் பனம்பழம் இருக்கிறது. பட்டணத்தில் உள்ள கடையில் விற்க இதனை கொண்டு செல்கிறேன்’ என்றான் வேடன். அதைக்கேட்ட அரசன் அப்பழத்தை தனக்கு தந்தால் தக்க விலை அளிப்பதாக கூறினான்.

தங்கப் பனம்பழம்

உடனே பெட்டியில் இருந்த பழத்தை எடுத்து மன்னனிடம் அளித்த வேடன், ஒரு குறுணி தானியத்தை விலையாக பெற்றுக்கொண்டான். பழத்தை கையில் எடுத்து பார்த்து அளவற்ற வியப்பும் மகிழ்வும் அடைந்தான். அப்பெரும் பனம்பழம் முழுவதும் தங்கத்தால் பிரகாசித்தது.

அரசன் வேடனை நோக்கி, ‘வேடனே! இக்காட்டில் இப்பழம் பழுக்கும் பனைமரம் எங்குள்ளது. தினமும் எவ்வளவு பழங்கள் பழுக்கும்? எவரிடம் இப்பழங்களை நீ விற்று வருகிறாய்?. பயப்படாமல் கூறு. உனக்கு வேண்டிய பொருளை யாம் அளிப்போம்’ என்றான்.

‘அரசே! இந்தக் காட்டில் அருகில்தான் இந்த பனைமரம் உள்ளது. தினமும் ஒரு பழம்தான் பழுக்கும். அதனை குறுணி தானியத்துக்கு ஒரு வணிகனிடம் விற்று என் குடும்பத்தை நடத்தி வருகிறேன். அம்மரத்தை தங்களுக்கு காட்டுகிறேன்’ என்று கூறி அரசனை அழைத்துச் சென்றான்.

பொற்பனைக்கு காவல்

வேடனுடன் சென்ற மன்னன் கோடி சூரிய பிரகாசமாயும், தங்கமயமாயும் விளங்கும் அதிசயமான அந்த பொற்பனைமரத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தான். பின்பு நகரில் இருந்த வணிகனை அழைத்து அவன் அது
வரையில் வேடனிடம் பெற்றிருந்த பனம்பழங்கள் அனைத்தையும் அவனுக்கு உரிய பொருள்களை வேண்டிய மட்டும் தந்து பெற்றுக்கொண்டான். பிறகு அப்பொற்பனை மரத்துக்கு தானே காவலாய் இருக்க தொடங்கினான்.

ஒருநாள் அப்பொற்பனை மரம் வடிவம் கொண்ட தெய்வபுருஷன் திவ்விய ஒளியுடன் அரசன் முன் தோன்றியது. ‘வேந்தே! நான் புஷ்பதந்தன் எனும் கணநாதன். சிவபெருமானின் கட்டளையால் பொற்பனையாக இருக்கிறேன். எனது கனிகளை விற்று கிடைத்த பொருளால் சிவபெருமானுக்கு உகந்த ஆலயம் ஒன்றை விரைவில் கட்டுவாயாக’ என்று கூறி மறைந்தான்.

உடனே அரசன் அப்பொற்பனையை சுற்றி ஒரு புதிய நகரை அமைத்து அதற்கு வல்லம் என்று பெயரிட்டு அங்கேயே தங்கி சிவலிங்கத்தை நேரில் கண்டு தரிசிக்கும் விருப்புடன் இருந்தான். அரசனுக்கு தேவையான பொருட்கள், அரண்மனை அலுவலர்கள் வாயிலாக இடையர்கள் மூலம் நாள்தோறும் அனுப்பிவைக்கப்பட்டது.

சிவலிங்கத்தில் ரத்தம்

தாம் இருக்கும் இடத்தை மன்னனுக்கு உணர்த்தி திருக்கோவில் கட்ட செய்ய வேண்டுமென சிவபெருமான் எண்ணினார். உணவு பொருள் கொண்டு வரும் வழியில் குறிப்பிட்ட இடத்தில் கல் தடுக்கி இடையர்கள் விழ, உணவு மற்றும் பூஜை பொருட்களை தமது சிரசின் மீது விழுமாறு இறைவன் செய்தருளினார்.

நாள்தோறும் இவ்வாறாகவே மன்னன் செய்தி அறிந்து அவ்விடம் வந்து அந்த கல்லைக் கண்டு தனது வாளால் அகற்ற முயன்றான். அப்போது சிவலிங்கத்தின் மீது காயம் பட்டு ரத்தம் பெருகத் தொடங்கியது. அது கல் அன்று அதுவே ‘அரன்குளலிங்கம்’ என உணர்ந்த மன்னன் உயிர்விட  முன்வந்தான்.

உடனே இறைவன் நேரில் தோன்றி மன்னனைத் தடுத்தாட்கொண்டு, அங்கே கோவில் கட்டுமாறு ஆணையிட்டார். இறைவன் ஆணைப்படி கல்மாஷபாதன் கோவில் எழுப்பினான். தன் பாவம் நீங்கப்பெற்ற கல்மாஷபாதனுக்கு இறையருளால் ஆண் மகன்  பிறந்தான்.

–கு.அரவிந்த்குமார், நமணசமுத்திரம்.

category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read