.
சற்று முன் :
ராகுல்காந்தியால் நாட்டை வழிநடத்த முடியுமா? நரேந்திர மோடி கேள்வி
மத்தியில் 3–வது அணி ஆட்சி அமைக்கும் பிரகாஷ் கரத்
பிரதமர் நரேந்திர மோடிதான் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
மோடி அலையை யாராலும் தடுக்க முடியாது வெங்கையா நாயுடு
எனது மகன் வாழ்க்கையை அரசியலாக்க வேண்டாம் பேரறிவாளன் தாயார் வேண்டுகோள்
மக்கள் நல திட்டங்களை அ.தி.மு.க. அரசு முடக்கவில்லை ஜெயலலிதா
தமிழ் சமுதாயம் எழுந்திருக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் லட்சியம் கருணாநிதி
துணை ராணுவத்தினர் 2 ஆயிரம் பேர் தமிழகம் வருகை
ராமநாதபுரத்தில் ராகுல்காந்தி இன்று பிரசாரம்
தாய்-மகன் அரசை தூக்கி எறிய இளைஞர்கள் முன்வர வேண்டும் நரேந்திர மோடி

Advertisement

திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை கடத்திச்சென்ற பனியன் தொழிலாளி கைது

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

அனுப்பர்பாளையம்

திருப்பூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை கடத்திச்சென்ற பனியன் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

சிறுமி கடத்தல்

சத்தியமங்கலம் சின்னாங்குட்டை பகுதியை சேர்ந்தவர் காவியா (வயது 15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது தாய், தந்தையுடன் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே கம்பெனியில் வேலை செய்து வந்த சேகர் (25) காவியாவிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 4–ந்தேதி அவரை கடத்திச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் 15.வேலம்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் இருவரையும் தேடி வந்தனர்.

தொழிலாளி கைது

இந்த நிலையில் இன்று காலை சேகர் மீண்டும் அதே கம்பெனிக்கு வேலைக்கு வந்தார். அவரை பார்த்த காவியாவின் பெற்றோர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே விரைந்து வந்த 15.வேலம்பாளையம் போலீசார் சேகரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அவர் கோபி கூடக்கரையை சேர்ந்த ராமசாமியின் மகன் சேகர் என்கிற ரங்கசாமி என்பதும், இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளதும், குழந்தை பிறந்த 3–வது நாளிலேயே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு மனைவி குழந்தைகளை விட்டு பிரிந்து திருப்பூர் வந்து பனியன் கம்பெனியில் சேர்ந்து வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

அப்போது தான் காவியாவுடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த 1½ ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அவரை அழைத்துக்கொண்டு வேளாங்கண்னி உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கியதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து சிறுமி காவியாவை தாயுடன்அனுப்பி வைத்த போலீசார் சேகரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

News Group Category:

தொடர்புடைய செய்திகள்

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read