Book World
நுகர்வோரே நீதிபதி
Book Image

Book History
Book Description
நுகர்வோரே நீதிபதி
நுகர்வோரின் உரிமையை பாதுகாக்கவும், அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டும், ‘நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்–1986, நுகர்வோர் பாதுகாப்பு விதிகள்–1987, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு விதிகள்–1988, நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்கு முறைகள்–2005 போன்ற சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நுகர்வோரை பாதுகாக்க சட்டங்கள் பல இருந்தாலும் நுகர்வோர் நீதிமன்றத்தை எவ்வாறு அணுகுவது, நுகர்வோர் நீதிமன்றத்தில் எத்தனை பிரிவுகள் இருக்கின்றன. மேல்முறையீடு செய்ய என்ன செய்ய வேண்டும். எங்கே மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பவை பற்றியும், புகார்தாரர் என்பவர் யார்?, புகார்தாரருக்கு எவ்வகையான புகார் கொடுக்க உரிமையுள்ளது, எவ்வாறு புகார் அளிக்க வேண்டும், நஷ்டஈடு தொகைக்கு ஏற்ப எந்த நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்பது பற்றியும் மேலும் பிற தகவல்களும் விரிவாகவும், விளக்கமாகவும், பாமரர்களுக்கும் விளங்கும் விதமாகவும் இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியே நூல் ஆசிரியராக இருப்பதால், அனைத்து தகவல்களையும் தெளிவுடனும், அவனுக்கு இத்துறையில் உள்ள அனுபவத்துடனும் அளித்துள்ளார்.
(ஆசிரியர்: நீதிபதி ஏ.ரத்தினவேலு; வெளியீடு: சி.சீதாராமன் அண்டு கோ., சட்ட புத்தக வெளியீட்டாளர், 73/37, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை, சென்னை–14; விலை: ரூ.165.)
புத்தக பிரிவு:
ரத்த ஞாயிறு
Book Image

Book History
Book Description
ரத்த ஞாயிறு
பாரத தேசத்தை எப்படி கட்டிக் காக்கவேண்டும் என்கிற அக்கறையுடன் போராடிய சரித்திர மகாபுருஷர்கள் ஏராளம். அவர்களுள் மக்களுக்காகவும், மதத்துக்காகவும், மொழிக்காகவும் போராடியவர்கள் சொற்பமானவர்கள். அவர்களுள் ஒருவர் சத்ரபதி சிவாஜி. இந்த மாவீரரை கதாநாயகனாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது இந்நூல்.
சிவாஜியின் காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் யாவும், விடுதலைப் போராட்டம் போன்றதே. பின்னாளில் ஆங்கிலேயனை விரட்டுவதற்காக எழுந்த போராட்டத்தின் தொடக்கத்தை சிவாஜிதான் அமைத்துக் கொடுத்தார் என்பதை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது. அப்சல்கான் கொலை, ஷிஸ்டாகான் விரல் பறிகொடுத்த நிகழ்ச்சி, அவுரங்கசீப்பின் கோட்டைக்குள் புகுந்து சிவாஜி தப்பியது இம்மூன்றும் இந்த வரலாற்று நாவலில் முக்கியமான நிகழ்ச்சிகள். கதாநாயகி பூஜ்யா கற்பனை பாத்திரமாக வந்து கதைக்கு வலுவூட்டுகிறாள்.
சரித்திரப் புதினங்களைப் படைக்க விரும்புவோருக்கு வரலாற்று அறிவும், ஆராய்ச்சித் திறனும், இலக்கியப் புலமையும் இருந்திடல் வேண்டும் என்பைத நிரூபிக்கும் வகையில் எழுத்து நடையில் ஒரு கம்பீரமும், சுவையும், வேகமும் கொண்டு இந்நாவலை படைத்திருக்கிறார், இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன். (வெளியிட்டோர்: பூம்புகார் பதிப்பகம், 127–63, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை–108; விலை: ரூ.260)
புத்தக பிரிவு:
தேசத்தை நேசிப்போம்
Book Image

Book History
Book Description
தேசத்தை நேசிப்போம்
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றைக் கூறும் நூல். சுதந்திரப் போராட்ட வீரர்கள், நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த தியாகிகள் ஆகியோருடைய வாழ்க்கைக் குறிப்புகளும் உள்ளன. இளைய தலைமுறையினர், சுதந்திரப் போராட்டம் பற்றி சிறிதளவே அறிந்திருப்பார்கள். அவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால், முழுமையாக அறிந்து கொள்வார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், சுதந்திரப் போராட்டம் பற்றி அறிந்து கொள்ள சிறந்த புத்தகம். (ஆசிரியர்: செந்தமிழ்த்தாசன்; வெளியிட்டோர்: இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109, பெருமாள் கோயில் தெரு, மாதவரம், சென்னை–60; விலை: ரூ.150.)
புத்தக பிரிவு:
விநாயகர் கதைகள்
Book Image

Book History
Book Description
விநாயகர் கதைகள்
எந்த காரியத்தையும் செய்யும் முன் அந்த காரியம் தடையின்றி நடைபெற விநாயகரை வழிபடுவது நடைமுறை. அத்தகை சிறப்புமிக்க மூல முதல்பொருளான விநாயகரின் திருவிளையாடல்கள், பல கதைகளாக தொகுக்கப்பட்டு நூலாக வெளியாகியுள்ளது.
(ஆசிரியர்: கீர்த்தி; வெளியீடு: சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2–வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை–49; விலை: ரூ.50)
புத்தக பிரிவு:
மணிவாசகரின் திருவாசகக் கதைகள்
Book Image

Book History
Book Description
மணிவாசகரின் திருவாசகக் கதைகள்
‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது திருவாசகத்தின் பெருமையை உணர்த்தும் சொல். திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகரின் வரலாறு, திருவாசகத்தில் கூறப்பட்டுள்ள சிவனின் கருணையும், இரக்கமும் நிறைந்த கதைகளை பக்தர்கள் அறிந்து இறைசிந்தனை அடையும் விதமாக இந்நூல் வெளிவந்துள்ளது.
(ஆசிரியர்: அருட்சுடர் பதிப்பகம், 60, கண்ணகி சாலை, ஈரோடு–638001; விலை: ரூ.80)























































































































































































































































































































































































































































































































