.
சற்று முன் :
வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார்

Advertisement

தி.மு.க.வுடன் மார்க்சிஸ்டு கட்சி கூட்டணி சேருமா? மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

சென்னை,

தி.மு.க.வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி சேருமா? என்பதற்கு அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் பேச்சு?

ஏப்ரல் 24–ந் தேதி நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை நிச்சயமாக இடம் பெறும் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளாக தோழமை கட்சிகளாக இருந்த இந்த இரு கட்சிகளும் இப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை.

ஏப்ரல் 26 தேதி குஜராத் மாநிலத்தில் மோடியும்-ராகுல் காந்தியும் ஒரே நாளில் தேர்தல் பிரச்சாரம்

காந்திநகர்,

பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளர் நரந்திரமோடியும் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் குஜராத் மாநிலத்தில் உள்ள பழங்குடி ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி ஏப்ரல் 26 தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள சோட்டா உதப்பூர் மற்றும் பவிஜித்பூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக மோடியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்கள் வகுப்புவாதிகளாக மாற வேண்டும்; சாஜியா இல்மிக்கு பா.ஜனதா கடும் கண்டனம்

புதுடெல்லி,

முஸ்லிம்கள் வகுப்புவாதிகளாக மாற வேண்டும் என பேசிய சாஜியா இல்மிக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கமலஹாசனின் உத்தம வில்லன் செப்டம்பர் 10-ந் தேதி ரிலீஸ் ஆகிறது

சென்னை

கமலஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் வரும் செப்டம்பர் மாதம் 10-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

’விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமலஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஸ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.  இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரானே இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதையை கமலஹாசனே எழுதியிருக்க, ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் சங்கர் எடிட்டிங் செய்கிறார்.

நெல்லையில் மாலை நேரத்தில் கருமேகம்

நெல்லையில் மாலை நேரத்தில் கருமேகம் திரண்டு இருந்த காட்சி.

விதிமுறைகளை பின்பற்றாமல் என்னால் அசாம்கான் மாதிரி இருக்க முடியாது கிரிராஜ் சிங் தாக்கு

பாட்னா,

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல் என்னால் அசாம்கான் மாதிரி இருக்க முடியாது என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.

கால்பந்தாட்ட போட்டியை ரசிக்க வந்த முன்னாள் அதிபரின் நிழல் உருவ பேய்

லாபஷ்

பொலிவியா நாட்டின் லாபஷ்  நகரில் உள்ள ஹர்னண்டோ சிலிஸ் மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. ரசிகர்கள் ஆர்வமாக போட்டியை ரசித்து கொண்டு இருந்தனர். அப்போது ரசிகர்கள் உட்கார்ந்து இருக்கும் வரிசையின் மத்தியில் இந்த   நிழல் உருவம் ஒன்று ஓடியது கேமராவினால் அது படம் பிடிக்கப்பட்டுள்ளது. பொலிவியா  நாட்டு மக்கள் இது கண்டிப்பாக பேய்தான் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆஞ்சநேயர் கோவிலில் சசிகலா

 கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோவிலில் சசிகலா சாமி கும்பிட்ட போது எடுத்த படம்.

நரேந்திர மோடி மீதான தனிப்பட்ட தாக்குதல்களை நிறுத்துங்கள் அருண்ஜெட்லி

அமிர்தசரஸ்,

நரேந்திர மோடி மீதான தனிப்பட்ட தாக்குதல்களை நிறுத்துங்கள் என்று அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

எனது கணவர் வதேரா மீது பாரதீய ஜனதாவால் தொடுக்கப்படுகிற குற்றச்சாட்டுகள், தன்னை வேதனை அடைய செய்வதாக பிரியங்கா காந்தி கூறினார். வளர்ச்சி பிரச்சினைகளில் இருந்து அர்த்தமற்ற பேச்சுக்கு மக்களை திசை திருப்புவதற்காக வதேரா மீது பாரதீய ஜனதா தாக்குதல் தொடுக்கிறது. நீங்கள் டி.வி.யை பார்க்கிறபோது, எதைக்காணுகிறீர்கள்? மிக கடினமான வார்த்தைகள் பேசப்படுகின்றன. என் குடும்பத்தினரை கேலி செய்கின்றனர். என் கணவர்பற்றி ஏராளமான விஷயங்கள் கூறப்படுகின்றன. இது எனக்கு வேதனையை தருகிறது.

மோடிக்கு எதிராக வதோதரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தர்ணா

வதோதரா,

குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் நரேந்திரமோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மதுசூதன் மிஸ்த்ரி போட்டியிடுகிறார். பிரசாரத்தின் போது மதுசூதன் மிஸ்திரி சார்பில் வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில் மோடியை குறித்து தரக்குறைவாக எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குஜராத் மாநில பா.ஜனதா சார்பில், மஞ்சள்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மிஸ்த்ரி மீது நேற்று தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு பதிவு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த மிஸ்த்ரி இன்று திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார்.

Pages

Advertisement

Advertisement

Most Read