|
``என்னால்
படித்ததை
நினைவில்
வைக்க
முடியவில்லை''.
என
சில
மாணவர்கள்
கருதுகிறர்கள்.
`அத்தனை
செய்திகளையும்
மூளையில்
போட்டு
வைத்தால்
அது
எப்படி
தாங்கிக்
கொள்ளும்
?''
என்றும்
சிலர்
கருத்துச்
சொல்வார்கள்.
ஆனால்
`மனித
மூளைக்கு
மிக
அபார
திறமை
இருக்கிறது'
என
ஆராய்ந்து
அறிவியல்
அறிஞர்கள்
கண்டறிந்துள்ளார்கள்.
இவர்கள்
மனித
மூளையில்
இரண்டு
``குயிண்டிலியன்''
(Quintillion)
அளவுக்கு
சின்னசின்ன
செய்திகளை
பாதுகாப்பாக
சேமித்து
வைக்க
முடியும்
''
என்று
ஆராய்ந்தும்
சொல்லியிருக்கிறார்கள்.
அதாவது
`ஒன்று'
என்ற
எண்ணிற்குபிறகு
18
பூஜ்யங்களை
சேர்த்தால்
எவ்வளவு
மதிப்புவருமோ
அதுதான்
`குயிண்டிலியம்'
என்பதன்
மதிப்பாகும்.
அதாவது
மனித
மூளையின்
சக்தி
40
விதமான
மொழிகளை
நினைவில்
கொள்ளுகின்ற
அளவுக்கு
`அபாரசக்தி'
கொண்டது.
இப்படி
அதிக
கொள்ளளவு
கொண்ட
மனித
மூளையில்
தேவையான
அளவு
தகவல்களைத்
திரட்டி
,
சேமித்து
பாதுகாப்பாக
முறைப்படி
வைக்காததுதான்
இன்றைய
மாணவமாணவிகளின்
குறைபாடாகும்.
ஓரு
நூலகத்தில்
பலவிதமான
புத்தகங்கள்
உள்ளன.
ஆனால்
அந்தப்புத்தகங்கள்
ஒழுங்கான
முறையில்
அடுக்கிவைக்கப்படவில்லை.
இதனால்
நமக்குத்
வேண்டிய
புத்தகத்தை
உடனே
கண்டுபிடிக்க
இயலாது.
தேவையான
புத்தகத்தை
எளிதான
முறையில்கண்டறிவதற்கு
``புத்தகப்பட்டியல்
அடங்கிய
குறிப்பேடும்
(Catalogue)
அவசியம்
தேவை''
இந்த
நூலகம்
போலவே
நமது
மூளையும்
ஒரு
``ஓழுங்கில்லாத
நூலகம்''
(Dis-Organised)
ஆகும்.
தேவையான
புத்தகங்களை
எளிதில்
கண்டுபிடிக்க
உதவும்
குறிப்பேடு
போல
மூளையில்
குவிந்து
கிடக்கும்
தகவல்களையும்
எளிதில்
கண்டுபிடிக்க
உதவும்.
குறிப்பேடு
போல
மூளையில்
குவிந்து
கிடக்கும்
தகவல்களையும்
எளிதில்
நினைவில்
கொள்ள
நமது
மூளைக்கு
நன்கு
பயிற்சி
கொடுக்க
வேண்டும்.
குறிப்பிட்ட
செய்திகளை
,
குறிப்பிட்ட
நேரத்தில்
நினைவில்
கொண்டுவரும்
``நினைவாற்றல்
கலையை''
வளர்த்துக்
கொள்ள
வேண்டும்.
நினைவாற்றலை
வளர்த்துக்
கொள்ளுவதற்க்கு
பலவழிகள்
உள்ளன.
அவற்றில்
ஒன்றுதான்
``தொடர்பு
ஏற்படுத்துதல்
முறை'
'(ASSOCIATION)
முறை
ஆகும்.
பொதுவாக
நமது
மூளையில்
சேமித்து
வைத்திருக்கின்ற
தகவல்களை
புதிதான
தகவல்களோடு
தொடர்புப்படுத்திப்
பார்க்கின்ற
பொழுதுதான்
நாம்
கற்றபாடம்
நினைவில்
நிற்கின்றது.
அறிவை
பெருக்குவதற்கு
`தொடர்புப்படுத்துதல்'
மிகவும்
உறுதுணையாக
அமையும்.
சிறுகுழந்தையாக
இருக்கின்ற
பொழுது
சில
தகவல்களை
நமக்குச்
சொல்லியிருப்பார்கள்.
அவையெல்லாம்
நம்மை
அறியாமலேயே
நம்முடைய
மூளையில்
தேக்கி
வைக்கப்பட்டிருக்கும்.
நேரம்
வரும்பொழுது
அந்த
செய்திகள்
நம்மை
அறியாமையிலேயே
ஒன்றுக்கொன்று
தொடர்பை
ஏற்படுத்திக்
கொள்ளும்.
உதாரணமாக
பக்கத்து
வீட்டில்
பாம்பு
வந்துவிட்டது
என்று
வைத்துக்கொள்வோம்.
அவர்கள்
``பாம்புபாம்பு''சத்தம்போட்டு
அழைக்கிறார்கள்.
அவர்கள்
அருகில்
சென்று
``பாம்பு
எங்கே
சென்றது
?''
என்று
கேட்டு
நாமும்
தேட
ஆரம்பிப்பதற்குள்,
நமது
மனதில்
எத்தனையோ
விதமான
எண்ணங்கள்
வந்து
நிழலாடும்.
சின்னக்
குழந்தையாய்
இருந்தபோது
பள்ளியில்
பார்த்த
பச்சைப்
பாம்பு
,
பாம்பு
கடித்து
இறந்து
போன
மாமா
பையன்,
பாம்பு
வடிவில்
சினிமாவில்
வந்த
நாகக்கன்னி.
பாம்பு
கடிக்கு
அரைக்குறையாய்
தெரிந்து
வைத்திருந்த
சித்த
மருத்துவம்
.
இப்படி
கூடைகூடையாய்
துண்டுத்
தகவல்கள்
பாம்பைப்பற்றி
நம்
எண்ணத்தில்
தோன்றும்.
இவையெல்லாம்
நாம்
அறிந்தோ
அறியாமலயோ
தெரிந்து
வைத்த
தகவல்கள்
தானே?
எனவேதான்
``ஒன்றுக்கொன்று
தொடர்பு
ஏற்படுத்தி
ஒருதகவலைக்
கவனமாக
நினைவில்
கொண்டால்
அந்தத்தகவல்
மனதில்
நிலைத்து
நிற்கும்''
என்று
ஆய்வாளர்கள்
கூறுகின்றார்கள்.
உதாரணமாக
நீங்கள்
கீழ்க்கண்ட
பத்து
வார்த்தைகளை
வரிசையாக
நினைவில்
வைக்க
வேண்டும்
என
முடிவு
செய்வதாக
வைத்துக்கொள்வோம். |