.
சற்று முன் :
தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மோடிதான் பிரதமர்: ராஜ்நாத்சிங்
10 கட்சிகளின் வரிச்சலுகையை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு
ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம்: இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு இன்று கூடுகிறது
மராட்டியத்தில் சோனியா காந்தி இன்று சூறாவளி பிரசாரம்
ஏசுவின் போதனைகளை பின்பற்றி பிறரது துயரங்களை களைந்திடுங்கள் ஜெயலலிதா ஈஸ்டர் வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவ மக்களுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

Advertisement

கும்பம்

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா  உள்ளவர்களுக்கும்)

பஞ்சம ஸ்தானம் வரும் குருவால் பாக்கியம் அனைத்தும் வந்தடையும்!

அன்பு நண்பர்களை அதிகம் பெற்றிருக்கும் கும்ப ராசி நேயர்களே!

நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த குருப்பெயர்ச்சி இப்பொழுது வந்து விட்டது. இனி உங்களுக்குக் கவலையில்லை. கடந்த ஓராண்டில் அர்த்தாஷ்டம குருவின் ஆதிக்கத்தில் சிக்கி நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்ய முடியவில்லையே என்று கவலைப்பட்ட உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி குதூகலம் தரும் பெயர்ச்சியாக அமையப் போகிறது.

குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியின் மீது பதிகிறது. அதுவும் தன லாபாதிபதியாக விளங்கும் குரு பார்ப்பதால் பொருளாதார நிலை உயரும். உற்றார் உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர்.  பட்ட கடன்கள் தீரும். பாசம் செலுத்தாமல் விலகிச் சென்றவர்கள் பணம் வந்தவுடன் தானாக வந்து இணைவர்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உள்ளம் மகிழும் விதம் உயர்வு கிட்டும். சம்பள உயர்வு பெற்று சந்தோஷம் காண்பர். சிந்தனை தெளிவாகும். சேமிப்பு கூடும். வாக்கு வலிமை கூடும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.

மனச்சுமை குறையும். பணச்சுமை கூடும். கடன் சுமை குறைந்தது என்று சொல்லிக் கடகட வென்று காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். இடமாற்றம், ஊர் மாற்றங்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். கடமையைக் கண்ணும் கருத்துமாகச் செய்து காசினியில் புகழ் ஏணியின் உச்சிக்கு செல்லப் போகிறீர்கள். இத்தனை நல்ல பலன்களையும் கொடுக்கும் குரு உங்களைப் பார்க்கும் முன்பு நீங்கள் அதைப் பார்க்கச் செல்ல வேண்டாமா? எனவே நீங்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள பட்டமங்கலம் சென்று திசை மாறிய தென்முகக் கடவுளை வழிபாடு செய்யுங்கள். குருவித்துறை, புளியறை, போன்ற ஊர்களில் எல்லாம் திசைமாறிய தென்முகக் குருவாக இருந்து அருள் வழங்குகிறார்.

வேடிக்கையாகப் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள்!

எல்லோரும் பதவிக்கு ஆசைப்படுவார்கள். நீங்கள் உதவி செய்ய ஆசைப்படுவீர்கள். உதவும் மனப்பான்மை உங்களிடம் இருப்பதால் தான் ஒவ்வொரு மனதிலும் இடம் பிடிக்கிறீர்கள். நாட்டுப்பற்று உங்களுக்கு அதிகமாகவே இருக்கும்.

வேடிக்கையாகப் பேசும் சுபாவம் உங்களுக்கு உண்டு. எந்தக் காரியத்தை எப்பொழுது செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதை அறிந்து வைத்திருப்பீர்கள். சொந்த காரியங்களை விட்டுவிட்டு அடுத்தவர் காரியங்களில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.  உங்கள் ராசிக்கு சப்தமாதிபதியாக சூரியன் அமைவதால், திருமணம் நடைபெறும் சமயத்தில் நல்ல தாரத்தை தேர்ந்தெடுப்பதின் மூலமே இல்லறத்தை இனிமையானதாக ஆக்கிக் கொள்ள முடியும்.

‘உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்வோம்’ என்று சொல்வீர்கள். மற்றவர்களின் பார்வைக்கு ஆடம்பரமாகக் காட்சி அளிப்பது உங்களுக்குப் பிடிக்காது. ராசிநாதன் சனியை மந்தன் என்று அழைப்பது வழக்கம். எனவே, எதிலும் நிதானத்துடன் செயல்பட்டு நிம்மதியைத் தேடிக் கொள்வீர்கள். இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி எப்படி அமையப் போகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

ஐந்தினில் குருதான் வந்தால்
அனைத்திலும் வெற்றி கிட்டும்!
பைதனில் பணமும் சேரும்!
பாராளும் யோகம் வாய்க்கும்!
வையகம் போற்றும் வண்ணம்
வாழ்க்கையும் அமையும் உண்மை!
செய்தொழில் வளர்ச்சி யாகும்!
செல்வாக்கும் அதிகரிக்கும்! என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் பார்த்தால் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு அனைத்து வழிகளிலும் வெற்றியைக் கொடுக்கப் போகிறார். அடிப்படை வசதிகளைப் பெருக்கி கொள்வீர்கள். கொடுக்கல்–வாங்கல்கள் சீராகும். கொற்றவர்களும், மற்றவர்களும் போற்றும் விதத்தில் வாழ்க்கை அமையும்.

தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். பங்காளிப் பகை மாறும். பகல் இரவாகப் பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். தகராறு செய்தவர்கள் தானாக வந்திணைவர்.  வணிகம் செய்பவர்களுக்கு வங்கிச் சேமிப்புகள் பெருகும். கணிசமான தொகை கைகளில் புரளும் விதத்தில் இந்த குருப்பெயர்ச்சி அமையப் போகிறது.

வெற்றிகளைக் குவிக்கும் வியாழனின் பார்வை!

ராசியைக் குருதான் பார்த்தால்
இனியதோர் வாழ்க்கை சேரும்!
ஒன்பதைக் குருதான் பார்த்தால்
உன்னத நிலைதான் வாய்க்கும்!
பதினொன்றை குருதான் பார்த்தால்
பணத் தேவை பூர்த்தியாகும்!  என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

குரு பகவான் ஐந்தாம் இடத்தில் இருந்து கொண்டு அதன் பார்வை பலத்தால் ஜென்ம ராசியையும், 9, 11 ஆகிய இடங்களையும் புனிதப்படுத்துகிறது. எனவே அந்த இடங்களில் ஆதிபத்யங்கள் எல்லாம் சிறப்பாக நடைபெறத் தொடங்கும்.

குருவின் பார்வை பதியும் இடங்களான 1, 9, 11 ஆகிய இடங்களால் என்னென்ன காரியங்கள் நடைபெற வேண்டுமோ அந்தந்த காரியங்கள் எல்லாம் சிறப்பாக நடைபெறும். குடும்பச் சுமை கூடும். அத்தனை உறவுகளிலும் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். பகை விலகி, பாசம் கூடும்.  

குருவின் அருட்பார்வையால், தேடி வந்த சிக்கல்கள் எல்லாம் விலகும். கோடி கோடியாய் பணம் குவிக்க வாய்ப்புகள் வாயில் கதவைத் தட்டும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். இனி தினம் தினம் திருவிழா! என்று சொல்லும் அளவிற்கு சுப நிகழ்ச்சிகள் அலைமோதப் போகின்றன.

குருவின் பார்வை பலம் ஒன்பதாமிடத்தில் பதிவதால், மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் நேரமிது. என்ன நினைத்தாலும், அதைச் செய்ய இனி நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். கூட்டு முயற்சிகளை விட்டு இனி தனிமுயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு அரசு வழிச் சலுகைகள் அனைத்தும் கிடைக்கப் போகிறது.

குருவின் பார்வை லாப ஸ்தானத்தில் பதிவது மிகுந்த யோகம் தான். எதிர்பார்த்ததைக் காட்டிலும், லாபம் தொழிலில் இரு மடங்காக வந்து சேரும். புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து பழைய தொழிலை தொடர்ந்து நடத்த ஒத்துழைப்பு கொடுப்பர். கிளைத்தொழில்களும் வேறு வேறு துறைகளில் தொடங்குவீர்கள்.

பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். ஆர்வத்தோடு கட்டிடப் பணியைத் தொடருவீர்கள். பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவதன் மூலமும், பிரதோஷ நாளில் நந்தி வழிபாட்டை நீங்கள் மேற்கொள்வதன் மூலமும், அபூர்வ பலன்களை அதிகம் பெற முடியும். நல்லவர்களின் சிநேகத்தால் பல சுபகாரியங்கள் நடைபெறும். அந்நிய தேசத்திலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளுங்கள். பொன்னும், பொருளும் போற்றுகிற செல்வாக்கும் இன்னும் அதிகரிக்க இந்த குருவின் பார்வை பலம் உங்களுக்கு கொடுக்கப் போகிறது.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலங்கள்!

மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு 13.11.2013 முதல் 12.3.2014 வரை வக்ர கதியில் இயங்குகிறார். இந்த வக்ரம் அவ்வளவு நல்லதல்ல. எனவே, எதிலும் கூடுதல் விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நேரமாக அமைகிறது. கொடுக்கல், வாங்கல்களில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். அடுத்தடுத்து விரயங்கள் வந்து ஆட்கொள்ளும்.அருகில் இருப்பவர்கள் உங்களை புரிந்து கொண்டு செயல்பட மாட்டார்கள். உரிய நேரத்தில் காரியங்கள் முடியும் என்பது சந்தேகம் தான்.

உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் வைத்து பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பணம் பற்றாக்குறை ஏற்படும். தொழிலுக்கு மூலதனம் இல்லையே எனக் கவலைப்படுவீர்கள். உத்தியோகத்திலும் உடன் பணிபுரிபவர்களால் பிரச்சினைகள் அதிகரிக்கும். யார் என்ன சொன்னாலும் சரி, என்ன செய்தாலும் சரி நாம் நம்முடைய வேலையை மட்டும் கவனித்துக் கொண்டு இருப்போம், பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று இருந்தால் மட்டுமே நிம்மதியை காண இயலும்.

குடும்பத்தினர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நேரமிது. நீண்ட தூரத்திலிருந்து வரும் தொலைபேசி தகவல் நிம்மதியை குறைக்கலாம். வழிபாட்டின் மூலம் வளர்ச்சியை கூட்டிக் கொண்டால் வக்ர காலம் கூட பொற்காலமாக மாறும். விஸ்வரூப ஆஞ்சநேயர் தரிசனம் மற்றும் ராகு, கேது பிரீதி முறையான சர்ப்ப சாந்தி திசை மாறிய தென்முகக் கடவுள் வழிபாடு ஆகியவற்றின் மூலம் நல்ல பலன்களை வரவழைத்துக் கொள்ளலாம்.

பெண்களுக்கான  சிறப்பு  பலன்கள்

கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி சீரும், சிறப்பும், செல்வாக்கும் கொடுக்கப் போகிறது. பதவியில் இருப்பவர்களுக்கு பதவி வாய்ப்புகள் வந்து சேரும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறவில்லையே என்ற கவலைகள் இனி அகலும். வாகன யோகம் முதல் இனி அனைத்து யோகங்களும் வந்து சேரப் போகிறது. பணப் பற்றாக்குறை அகலும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குருவின் வக்ர காலத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.   உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கும் வாய்ப்பும் கட்டிடப் பணியை தொடங்கும் வாய்ப்பும் உருவாகலாம். சனிக்கிழமை தோறும் சனிபகவான் வழிபாடும், யோக பலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்தியும் செய்து கொண்டால் சந்தோஷங்களை நாளும் சந்திக்கலாம்.

செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!

வியாழக்கிழமை தோறும் குரு  தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவதோடு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள விநாயகர், முருகன், சுவாமி, அம்மன், நந்தி தேவர், தட்சிணா மூர்த்தி, வராகி போன்றவற்றை யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வாருங்கள். தேக நலனும் கூடும். செல்வ நிலையும் உயரும்.

Raasi Balan: 
கும்பம்
Raasi image guru page: 

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Most Read