.
சற்று முன் :
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 140 ரன்கள் குவிப்பு
இந்தியா வலிமையடைய எனது தாயார் சோனியா காந்திக்கு வாக்களியுங்கள் பிரியங்கா பேச்சு
வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார்

Advertisement

இந்திய எல்லையில் அத்துமீறல் பிரச்சினை; பாகிஸ்தான் அரசு அடாவடி

Syndicate

Subscribe to Syndicate

Text Resize

-A +A

இஸ்லாமாபாத்,

காஷ்மீர் எல்லையில் நடந்து வரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு, இந்திய தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது.

பாகிஸ்தான் தாக்குதல்

காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த 6-ந்தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் இதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று மறுத்துள்ள பாகிஸ்தான், எல்லை பகுதியில் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் காலையில் பூஞ்ச் பகுதியில் நடந்த தாக்குதலில் பாகிஸ்தானின் ராவல்கோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததாக பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபர்பாத் நகரில் நூற்றுக்கணக்கானோர் சாலைகளில் கூடி இந்தியாவுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போர் நிறுத்த ஒப்பந்தம்

இதற்கிடையே 2003-ம் ஆண்டைய போர்நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா மீறி வருவதாகவும், காஷ்மீர் எல்லையில் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. மேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை செயலில் காட்ட வேண்டும் என்றும் பாகிஸ்தான் கூறியது.  

அதுமட்டுமின்றி இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய துணை தூதர் கோபால் பாக்லேவுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்தது. பின்னர் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், எல்லையில் அமைதியை ஏற்படுத்த சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது.

இதனால் இரு நாட்டு உறவுகளில் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, எல்லைப்பகுதியிலும் பதற்றம் அதிகரித்து உள்ளது.

category:

தொடர்புடைய செய்திகள்

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read