.
சற்று முன் :
மராட்டியத்தில் சோனியா காந்தி இன்று சூறாவளி பிரசாரம்
முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவது அவசியம் கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி
ஏசுவின் போதனைகளை பின்பற்றி பிறரது துயரங்களை களைந்திடுங்கள் ஜெயலலிதா ஈஸ்டர் வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவ மக்களுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
ஜெயலலிதா வாங்கிக் குவித்துள்ள சொத்துகளின் மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி கருணாநிதி
சிவந்தி ஆதித்தனார் பெருமை என்றென்றும் நிலைத்து இருக்கும் வைகோ
வாரணாசி கோவில் வளாகத்தில் இருந்து கெஜ்ரிவால் குடும்பத்தினர் வெளியேற்றம்
சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும்
ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை வி.எஸ். சம்பத் எச்சரிக்கை
ஊழல் அணியின் தலைவர் சரத்பவார் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு

Advertisement

திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட மணல் கொள்ளை குறித்து சி.பி.ஐ. விசாரணை ஐகோர்ட்டு உத்தரவு

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/madrasHC_0.jpgசென்னை,

திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளி பதுக்கி வைத்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், பூந்தமல்லி வட்டார ஆற்றுமணல் லாரி உரிமையாளர் சங்கம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

மணல் விற்பனை

தமிழ்நாட்டில் 1–10–2003 முதல் மணல் குவாரிகளை தமிழக பொதுப்பணி துறை நடத்தி, விற்பனை செய்து வருகிறது. நாங்கள் இந்த குவாரிகளுக்கு நேரடியாக சென்று மணல் வாங்கி வந்தோம்.

இந்த நிலையில், கோவை ராம்நகரை சேர்ந்த பழனிசாமி என்பவர் சட்டவிரோதமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் பழையசீவரம், கள்ளபிரான்புரம் ஆகிய கிராமங்களில் ஆற்று மணலை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார். இவரிடம் தான் நாங்கள் ஆற்று மணல் வாங்கவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறோம். இதுகுறித்து தமிழக அரசிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

44 ஆயிரம் லோடு மணல்கள்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மணிகுமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்களில் ஆற்று மணல் சேமித்து வைத்துள்ளதை படம் பிடித்து இந்த கோர்ட்டில் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், காஞ்சீபுரம் கலெக்டர் அப்படி ஒரு மணல் சேமிப்பு கிடங்கு இல்லை என்று தன் பதில் மனுவில் கூறியுள்ளார்.

மேலும், இந்த கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த சுரங்கத்துறை உதவி இயக்குனர், கள்ளபிரான்புரம் கிராமத்தில் 30,790 லாரி லோடுகள் கொண்ட ஆற்று மணலும், பாளைய சீவரம் கிராமத்தில் 13,316 லாரி லோடுகள் கொண்ட ஆற்று மணலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அதிகாரிகளுக்கு ஏன் தெரியவில்லை?

மலை போல் குவிந்து கிடக்கும் இந்த மணல்கள் அதிகாரிகளின் கண்களுக்கு மட்டும் எப்படி தெரியவில்லை? எனவே இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுகிறேன்.

இந்த மணல் புகார் குறித்து விசாரணை நடத்த ஐ.ஜி. அந்தஸ்துக்கு குறையாக அதிகாரியை சி.பி.ஐ. இயக்குனர் நியமிக்கவேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் விசாரணை அதிகாரி, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பொதுப்பணி துறை நடத்தும் மணல் குவாரியில் எத்தனை? அங்கிருந்து பழனிசாமிக்கு எவ்வளவு மணல் விற்பனை செய்யப்பட்டுள்ளது? பழனிசாமிக்கு சொந்தமாக எத்தனை வாகனங்கள் உள்ளது? 2 கிராமங்களில் மலை போல் குவிந்து கிடக்கும் ஆற்று மணல் குறித்து அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்பதை விசாரிக்கவேண்டும்.

இழப்பு அறிக்கை

இந்த 2 மாவட்டங்களில் 2011 முதல் இன்று வரை பணியாற்றிய வணிக வரித்துறை, வருவாய்த்துறை, சுரங்கம் மற்றும் தாதுத்துறை, பொதுப்பணித்துறை ஆகிய துறைகளில் பணியாற்றி அதிகாரிகள் விபரத்தை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தவேண்டும்.

இந்த மணல் விற்பனையில் பதிவான விற்பனை வரி ரசீதுகள் விபரங்களையும் சேகரிக்கவேண்டும். பின்னர் இந்த மணல் குவாரி முறைகேட்டினால், தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்த மதிப்பீடு செய்து, அந்த விபர அறிக்கையை தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கவேண்டும். இந்த வழக்கின் விசாரணை குறித்து அறிக்கையை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

image: 

category:

News Group Category:

தொடர்புடைய செய்திகள்

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read