.
சற்று முன் :
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 140 ரன்கள் குவிப்பு
இந்தியா வலிமையடைய எனது தாயார் சோனியா காந்திக்கு வாக்களியுங்கள் பிரியங்கா பேச்சு
வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார்

Advertisement

இந்திய சினிமா நூற்றாண்டு கோலாகல தொடக்க விழா; ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரோஜாதேவி உள்பட 59 பேருக்கு சிறப்பு விருது: ஜெயலலிதா வழங்கினார்

Syndicate

Subscribe to Syndicate

Text Resize

-A +A

சென்னை,

இந்தியாவில் சினிமா தயாரிப்பு தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

ஜெயலலிதா குத்து விளக்கேற்றினார்

இதையொட்டி தமிழ்நாடு அரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இணைந்து, இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை நடத்தின.

சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு வந்தவர்களை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சி.கல்யாண் வரவேற்றார்.

நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த நூற்றாண்டு விழாவை, முதல்–அமைச்சர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அவரைத்தொடர்ந்து பழம் பெரும் நடிகைகள் வைஜெயந்தி மாலா, சரோஜாதேவி ஆகியோரும் குத்துவிளக்கேற்றினர்.

பிரமாண்ட மேடை

இந்த விழா நடந்த இடம் முழுவதும், சினிமாவுக்காக போடப்படும் ‘செட்’ போல பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பல வர்ண விளக்குகள் மூலம் அந்தப் பகுதி முழுவதையும் ஒளியூட்டி இருந்தனர்.

விழா மேடையை, 1980–90–ம் ஆண்டுகளில் சினிமா தியேட்டர்களில் காணப்பட்ட திரைபோல், பழமையை கலந்து வடிவமைத்திருந்தனர். சினிமாத்துறையின் பல்வேறு பிரிவுகளில் ஜாம்பவான்களாக விளங்கியவர்களின் படங்கள், பாடல்கள் அந்தத்திரையில் காட்டப்பட்டது.

ரசிகர்கள் ஆரவாரம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் ஆகியோர் விழாவுக்கு வந்தபோது, பலத்த கைதட்டல் எழுந்தது. அதுபோல் திரையில் அவர்கள் காட்டப்படும்போதும், விசில் சத்தத்துடன் ஆரவாரம் கிளம்பியது.

இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ் சினிமாவின் வரலாற்றை குறும்படமாக வெளியிட்டனர். எம்.ஜி.ஆரின் படங்கள் காட்டப்பட்ட போதும், எம்.ஜி.ஆரின் பெயரை தலைமை உரை நிகழ்த்திய முதல்–அமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்ட போதும், அ.தி.மு.க.வினர் மிகுந்த ஆரவாரம் செய்தனர்.

அதில், திரையிலும், திரையின் பின்னணியிலும் சிறப்பாக செயல்பட்டவர்களின் படங்கள், திரைப்பட காட்சிகள் வரிசையாக இடம் பெற்றிருந்தன. அந்த வரிசையில் முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதியின் புகைப் படமும் காட்டப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், எதிர்க்கட்சித்தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர்கள் விஜய், வாகை சந்திரசேகர் ஆகியோர் நடித்த திரைப்பட காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன. இந்த குறும்படத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா பார்த்தார்.

56 பேருக்கு விருது

இந்த விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமை உரை நிகழ்த்திவிட்டு, குறும்படத்தை பார்த்து ரசித்தார். அதன் பின்னர், திரைப்படத்துறையில் சாதனை படைத்த 56 பேருக்கு விருது வழங்கி கவுரவித்தார். அவர்களின் பெயர் வருமாறு:–

நடிகர்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், பிரபு, விவேக், ஏவி.எம். ஸ்டூடியோ சார்பில் ஏவி.எம். சரவணன், பிரசாத் ஸ்டூடியோ சார்பில் ரமேஷ் பிரசாத், விஜயா புரடெக்ஷன் சார்பில் வெங்கட்ராம ரெட்டி, ஆனந்தா எல்.சுரேஷ் (வினியோகஸ்தர்), ஜோகர் (கோவை டிலைட் தியேட்டர்),

டைரக்டர்கள் சி.பி.ராஜேந்திரன், மகேந்திரன், பி.வாசு, இசையமைப்பாளர் இளையராஜா, வயலின் கலைஞர் என்.சுப்பிரமணியம், பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, ஜமுனா ராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரி, பாடலாசிரியர் புலமைப்பித்தன், வசனகர்த்தா ஆரூர்தாஸ், ஒளிப்பதிவாளர் பாபு, எடிட்டர் விட்டல்,

டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் சார்பில் அவருடைய மகன் ராஜூசுந்தரம், தாரா, ஸ்டண்ட் கலைஞர் கே.எஸ்.மாதவன், ஒலிப்பதிவாளர் கண்ணன், மேக்கப் மேன் சி.மாதவராவ், ஆடை வடிவமைப்பாளர் கொண்டையா, தொழில்நுட்ப கலைஞர் சாமிக்கண்ணு, ஸ்டில் போட்டோகிராபர் ஏ.சங்கர்ராவ், பின்னணி குரல் கலைஞர் கே.என்.காளை, அனுராதா, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், படஅதிபர் ஆர்.பி.சவுத்ரி, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா,

நடிகைகள்

நடிகைகள் சரோஜா தேவி, மனோரமா, எம்.என்.ராஜம், ராஜஸ்ரீ, சாரதா, காஞ்சனா, ஜமுனா, கிருஷ்ணகுமாரி, சவுகார் ஜானகி, மீனா, சிம்ரன், திரிஷா, ஜெயசுதா, ஜெயபிரதா,

தயாரிப்பு நிர்வாகி என்.ராமதுரை, லைட்மேன் வி.சுந்தரம், சக நடிகர் ஏ.ராமராவ், சினி ஏஜெண்ட் ஜி.ஆறுமுகம், செட் டிசைனர் வி.துரை, தயாரிப்பு உதவியாளர் சி.என்.சுந்தரம்,

உடல்நிலை குறைவு காரணமாக விழாவுக்கு வர முடியாததால் நடிகை பி.எஸ்.சரோஜாவுக்குரிய விருது அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விருதுகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா சுமார் 40 நிமிடங்கள் நின்று கொண்டே வழங்கினார்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண் நினைவு பரிசு வழங்கினார்.

கலை நிகழ்ச்சிகள்

இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் பல பிரமுகர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். விழா இறுதியில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் செயலாளர் எல்.சுரேஷ் நன்றி கூறினார்.

தொடக்க விழா நிறைவடைந்ததை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த கலை நிகழ்ச்சிகளில் பிரபல நடிகர்கள், நடிகைகள் நடனமாடினர். இந்த நிகழ்ச்சிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா ரசித்துப்பார்த்தார்.

சரத்குமார்

விழாவில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சத்யராஜ், சிலம்பரசன், தனுஷ், கார்த்தி, ஷாம், விஷால், அர்ஜுன், பரத், அதர்வா, ஆர்யா, சந்தானம். நடிகைகள் அனுஷ்கா, திரிஷா, அமலாபால், ஹன்சிகா, தன்சிகா, ராதா, கார்த்திகா, துளசி, ரோஜா, தேவயானி, டைரக்டர்கள் கே.பாலசந்தர், பாலா, தங்கர்பச்சான், சசிகுமார், சமுத்திரகனி, தரணி, பேரரசு, மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

சினிமாத்துறையினர் கலந்து கொள்ளும் விழா என்பதால், நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் அ.தி.மு.க. கட்சியினர் பெருமளவில் கூடியிருந்தனர். இதனால் விழா நிகழ்ச்சிகளை காண வந்தவர்கள், மிகுந்த கெடுபிடிக்கு இடையே விழா பகுதிக்கு அனுப்பப்பட்டனர்.

News Category:

News Group Category:

தொடர்புடைய செய்திகள்

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read