.
சற்று முன் :
தேசிய நதிகள் இணைக்கப்பட்டு தமிழக பாசன நீர் பிரச்சனை தீர்க்கப்படும் நரேந்திர மோடி
தோல்வி பயணத்தினால் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தேர்தலில் போட்டியிடவில்லை: மோடி
ராமேசுவரம் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றப்படும் நரேந்திர மோடி
இந்திய மீனவர்களை காக்க மத்திய காங்கிரஸ் அரசு தவறிவிட்டது நரேந்திர மோடி
யாரும் பசியுடன் தூங்க செல்ல வேண்டாம் என்பதையே நாங்கள் விரும்புகிறோம் ராகுல் காந்தி
மோடிதான் நாட்டின் அடுத்த பிரதமர் தனது வாக்கை பதிவு செய்த எடியூரப்பா தகவல்
பாராளுமன்றத் தேர்தல் 2014; ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தனது வாக்கை பதிவு செய்தார்
பிலிபெட் தொகுதியில் 5 கிராம மக்கள் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணித்தனர்

Advertisement

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவை புறக்கணித்த கதாநாயகிகள்!

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

சென்னை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த 18–ந் தேதி,   சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு வந்த ஒரே கதாநாயகி, தன்ஷிகா. மற்ற கதாநாயகிகள் அத்தனை பேரும் பொதுக்குழுவை புறக்கணித்து விட்டார்கள்.

‘‘சம்பள பாக்கி என்றால் மட்டும் உடனே நடிகர் சங்கத்துக்கு வரும் கதாநாயகிகள், நடிகர் சங்கம் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. இத்தனைக்கும் 18–ந் தேதி படப்பிடிப்பு எதுவும் இல்லை. சினிமா நூற்றாண்டு விழாவுக்காக படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டார்கள். அப்படியிருந்தும் பொதுக்குழு கூட்டத்துக்கு கதாநாயகிகள் வராதது கண்டிக்கத்தக்கது’’ என்று சில கதாநாயகர்களே சீறினார்கள்!

ஆட மறுத்த நடிகைகள்!

இது போல் இந்திய சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி நடந்த கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்படி, எல்லா கதாநாயகிகளுக்கும் ‘பிலிம்சேம்பர்’ சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. முன்னணி கதாநாயகிகள் சிலர் நடனம் ஆட மறுத்து விட்டார்கள். அவர்கள் அத்தனை பேரும் கோடியில் சம்பளம் வாங்கும் முன்னணி கதாநாயகிகள்.

மும்பையில் ஒரு ஆங்கில பத்திரிகை நடத்திய விழாவில், அந்த முன்னணி கதாநாயகிகள் அபாரமாக ஆட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது!
 

category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Most Read