.
சற்று முன் :
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 140 ரன்கள் குவிப்பு
இந்தியா வலிமையடைய எனது தாயார் சோனியா காந்திக்கு வாக்களியுங்கள் பிரியங்கா பேச்சு
வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார்

Advertisement

லண்டன் விமான நிலையத்தில் யோகா குரு ராம்தேவிடம் 8 மணி நேரம் விசாரணை: பா.ஜனதா கடும் கண்டனம்

Syndicate

Subscribe to Syndicate

Text Resize

-A +A

லண்டன்

லண்டன் விமான நிலையத்தில் யோகா குரு ராம்தேவிடம் அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்திய சம்பவத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் சுவாமி விவேகானந்தரின் 120–வது பிறந்த தினவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக யோகா குரு ராம்தேவ் நேற்று லண்டன் சென்றார். அங்குள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் இறங்கிய அவரை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.  அவர்கள், ராம்தேவ் வைத்திருந்த இந்தி மற்றும் சமஸ்கிருத புத்தகங்கள் குறித்தும், அவர் கொண்டு சென்ற மருந்துகள் குறித்தும் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அவர் தொழில்முறை விசாவுக்கு பதிலாக சுற்றுலா விசாவில் சென்றது குறித்து விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவரை தடுத்து நிறுத்தியதற்கான உண்மையான காரணங்கள் குறித்து தெரிவிக்கப்படவில்லை.  இந்த சம்பவத்தால் ராம்தேவை அழைத்து செல்ல வந்தவர்கள் விமான நிலையத்தின் வெளியே காத்திருந்தனர். இறுதியில் சுமார் 8 மணி நேர விசாரணைக்குப்பின் அவர் விடுவிக்கப்பட்டார்.  இதனால் ராம்தேவ் கலந்து கொள்வதாக இருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்பட்டன. மேலும் நேற்று லண்டனில் நடைபெற இருந்த 3 நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

இது குறித்து யோகா குரு ராம்தேவ் கூறும்போது, ‘என்னுடைய வாழ்நாளில் நான் எந்த தவறும் செய்தது இல்லை. ஆயினும் நான் லண்டன் விமான நிலையத்தில் 8 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன். ஆனால் என்னிடம் விசாரணை நடத்தியதற்கான காரணம் குறித்து அவர்கள் தெரிவிக்கவில்லை’ என்றார். இதற்கிடையே இந்த சம்பவத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:– ராம்தேவ் தடுத்து நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். அவர் மந்திரங்கள் அடங்கிய டைரியை எடுத்து சென்றதால்தான் தடுத்து நிறுத்தப்பட்டதாக நான் நினைக்கிறேன். அந்த டைரியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதுடன், அவரை மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும். இந்த சம்பவத்தை மத்திய அரசு கடுமையாக எடுத்துக்கொண்டு, விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

category:

News Group Category:

தொடர்புடைய செய்திகள்

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read