.
சற்று முன் :
வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார்

Advertisement

காஷ்மீர் அரசை கவிழ்க்க முயற்சி என்ற குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது: முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங்

Syndicate

Subscribe to Syndicate

Text Resize

-A +A

புதுடெல்லி

நான் ராணுவ ரகசிய உளவுப்பிரிவை தவறாக பயன்படுத்தி காஷ்மீர் அரசை கவிழ்க்க முயற்சித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் உள்நோக்கம் கொண்டவை என்று முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் கூறினார்.

முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே. சிங், பதவியில் இருந்தபோது, ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியை கொண்டு, சிறப்பு உளவுப்பிரிவை உருவாக்கி, அதைக்கொண்டு காஷ்மீரில் உமர் அப்துல்லா ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்த குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவதுபற்றி ராணுவ அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளன.

இந்த நிலையில் டெல்லியில் வி.கே.சிங் இன்று சிறப்பு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:– நான் அமைத்த ரகசிய உளவுப்பிரிவு (டெக்னிக்கல் சப்போர்ட் டிவிசன் என்னும் தொழில் நுட்ப ஆதரவு பிரிவு) தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டதாகும். காஷ்மீர் மாநில அரசை அகற்ற நான் விரும்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டு அபத்தமானது.  இது தொடர்பாக ராணுவமும், பாதுகாப்பு அமைச்சகமும் நடத்திய விசாரணையில், ரகசிய உளவுப்பிரிவுக்கு எதிராக சந்தேகம் எதையும் காணவில்லை. இந்த விசாரணை அறிக்கையை முடித்து வைப்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் வெளியான தகவல்கள் அனைத்துமே உள்நோக்கம் கொண்டவை ஆகும். பாரதீய ஜனதா தலைவர் நரேந்திர மோடியுடன் நான் மேடையை பகிர்ந்து கொண்டது உள்பட பல்வேறு காரணங்கள் இதற்கு பின்னணியில் உள்ளன.  விசாரணை அறிக்கையை முடிவுக்கு கொண்டு வர விரும்பி, அதை தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு அரசு அனுப்பி வைத்தபிறகு, ராணுவ அமைச்சகத்தில் இருந்து வெளியேறி உள்ள இணைச்செயலாளர் ஒருவர் எனக்கு எதிரான அறிக்கையை கசிய விட்டிருக்கிறார்.  இந்திய ராணுவம் அமைத்த அந்த ரகசிய உளவுப்பிரிவு ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரின் முழுமையான ஒப்புதலின்படியே அமைக்கப்பட்டது.  இவ்வாறு அவர் கூறினார்.

category:

News Group Category:

தொடர்புடைய செய்திகள்

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read