காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!
காலையில் வெந்நீர் எடுத்துக் கொள்ளும் பொழுது வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருக்க உதவுகிறது.மேலும் உடல் எடையை குறைக்க துணைபுரிகிறது.
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
வெந்நீர் குடிப்பதால் உச்சந்தலைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. இவை கூந்தலை வலுவாக்கவும் முடி உதிர்வை தடுக்கவும் உதவுகிறது.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்,ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளவும் முக்கிய பங்காற்றுகிறது.
வெந்நீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், இறந்த சரும செல்களை சீரமைக்கவும் உதவுகிறது.
செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலம் வாயு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் பொருமல் போன்ற பல பிரச்சனைகளை தடுக்கும் தன்மைக்கொண்டது.