பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணங்கள்..!
11 வயதுக்கு முன்பே பூப்படையும் பெண் குழந்தைகளுக்கு, `ஈஸ்ட்ரோஜென்' சுரப்பு அதிகமாக இருக்கும். அதனால், வருங்காலத்தில் அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம்.
'மெனோபாஸ்', சரியான வயதில் வராமல், இயல்பைவிடத் தள்ளிப்போனால் மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம். 55 வயதைக் கடந்து மெனோபாஸ் ஏற்படும் பெண்களுக்கு, புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகம்.
30 வயதுக்குப் பிறகு, முதல் குழந்தையைப் பெறும் பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடும்.
வாழ்நாள் முழுவதும், கர்ப்பம் அடையாத பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.
மாசு கலந்த காற்றை அதிகம் சுவாசிக்கும் பெண்களுக்கும்,மார்பகப் புற்றுநோய் வரலாம்.
இரவுப் பணியில் அதிகம் வேலைசெய்யும் பெண்களுக்கு, `மெலோடினின்' ஹார்மோன் சுரப்பு குறையத்துவங்கும். இது சில வருடங்கள் வரை தொடர்ந்தால், மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம்.