பாம்பு கடித்தவுடன் செய்ய வேண்டியதும்...செய்ய கூடாததும்...!
பாம்பு கடித்தால் பதற்றம் அடையக் கூடாது. அவ்வாறு அடைந்தால் ரத்த ஓட்டம் அதிகரித்து விஷம் விரைவாக உடலில் கலக்க வழிவகுக்கிறது.
துணியை வைத்து இறுக்கமாக கட்டக்கூடாது.அப்படி இறுக்கமாக கட்டினால் ரத்த ஓட்டம் பாதித்து அந்த இடம் செயலிழந்து போகும்.
கடிபட்ட நபர் ஓடவோ, நடக்கவோ கூடாது. அதனால் விஷத்தின் பரவலை தடுக்க முடியும்.
திரைப்படங்களில் பார்ப்பது போல் பாம்பு கடித்தவுடன் விஷத்தை உறிஞ்சு எடுத்தல் கூடாது. அது உறிஞ்சி எடுப்பவரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.
பாம்பு கடித்தவுடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து செல்ல வேண்டும்.
கடித்த பாம்பின் அடையாளத்தை கண்டுகொள்வது நல்லது.அதன் மூலம் தகுந்த சிகிச்சையை விரைவில் பெற உதவும்.