தமிழ் திரைத்துறையில் கடந்த காலங்களில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன திரைப்படங்களை ரீ- ரிலீஸ் செய்வது தற்போது டிரெண்டாகி உள்ளது.
அவ்வாறு, சிவா மனசுல சக்தி, விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டது.
தொடர்ந்து, நடிகர் விஜய் நடித்து வெளியான கில்லி திரைப்படம் 20 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் ரீ-ரிலீஸ் ஆனது.
நிலையில், நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு 'பில்லா' திரைப்படம் வருகிற மே 1-ந்தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.