கெட்ட கொழுப்பைக் குறைக்க என்னென்ன செய்ய வேண்டும்?
ஒரு முறை சூடு செய்து பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
அதிக நார்ச்சத்து உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாலின் மூலம் கிடைக்கும் புரத சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உணவில் பூண்டு அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இந்த வழிமுறைகளை நமது வாழ்கையில் நடைமுறைப் படுத்தினால், நல்ல கொழுப்பை அதிகரித்து, கெட்ட கொழுப்பைக் குறைத்து நலத்துடன் வாழ முடியும்.