

திருக்கனூர்
திருக்கனூர் அருகே உள்ள கைக்கிலப்பட்டு சங்கராபரணி ஆற்றங்கரையோரம் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருக்கனூர் போலீசார் அங்கு விரைந்து சூதாட்ட கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் 3 பேர் போலீசாரிடம் மாட்டிக்கொண்டனர். 6 பேர் தப்பியோடி விட்டனர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் கொ.மணவெளியை சேர்ந்த நாகராஜன் (வயது 42), சித்தலம்பட்டு கிருஷ்ணா நகரை சேர்ந்த சோமசுந்தரம் (30), முட்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சந்தானம் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 720 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய கைக்கிலப்பட்டை சேர்ந்த ரவி ராஜன், சுத்துக்கேணியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், ஸ்ரீகாந்த் உள்பட 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.