அட்வெர்ட்டோரில் செய்திகள்

தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் பெருமையை சொல்லும் ‘டைட்டன்’ நிறுவனத்தின் ‘நம்ம தமிழ்நாடு’ கைக்கடிகாரங்கள்

தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் பெருமையை சொல்லும் ‘டைட்டன்’ நிறுவனத்தின் ‘நம்ம தமிழ்நாடு’ கைக்கடிகாரங்கள் + "||" + Advertorial: Titan's Namma Nadu watches, Exibits richness of Tamil language and its culture-Advertorial

தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் பெருமையை சொல்லும் ‘டைட்டன்’ நிறுவனத்தின் ‘நம்ம தமிழ்நாடு’ கைக்கடிகாரங்கள்
டைட்டன் நிறுவனம் ‘நம்ம தமிழ்நாடு‘ என்ற வரிசையில் செம்மொழியான தமிழ் மற்றும் தமிழ் மண்ணின் நிகரற்ற பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை பெருமைப்படுத்தும் வடிவமைப்புகளில் கைக்கடிகாரங்களை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது,
• கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் காஞ்சி பட்டு நெசவு வடிவம்,
• பிரமிப்பூட்டும் கோவில் கட்டிடக்கலை அம்சம்,
• தொன்மைமிக்க தமிழ் எழுத்து வடிவங்கள் 
ஆகிய உள்ளம்சங்களை கொண்டதாகவும், வாடிக்கையாளர்களின் மனம் கவரும் விதத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

கலை உணர்வின் மகத்தான சுவையை வெளிப்படுத்தும் விதமாகவும், கண்கவரும் அழகுணர்வுடன் கூடிய பண்பாட்டை ஒருங்கிணைக்கும் நிலையிலும், பல்வேறு படைப்புகள் தமிழ் சமூகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

மரபின் செழுமை மற்றும் ஆழமான பண்பாடு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் விதமாக நெசவு செய்யப்படும் காஞ்சீபுரம் பட்டு சேலைகள், நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட அணிகலன்கள் மற்றும் மென்மையான மல்லிகை மலர்கள் ஆகியவற்றால் தங்களை அழகுபடுத்திக்கொண்ட பெண்கள் கொண்டதாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. 

                    இந்து புராணங்களின் கூற்றுப்படி, தெய்வங்களுக்குரிய ஆடைகளை உருவாக்கும் தலைமை நெசவாளராக உள்ள மார்க்கண்ட முனிவரின் வழித்தோன்றல்களாக காஞ்சீபுரத்தில் உள்ள பட்டு நெசவாளர்கள் சொல்லப்படுகிறார்கள். காஞ்சி பட்டு சேலைகளின் நெசவு நயம் மற்றும் அவற்றில் வெளிப்படும் வடிவமைப்புகள் ஆகியவற்றின் பின்னணியில் புராணங்கள் கூறும் உள்ளர்த்தம் மற்றும் மக்களின் வாழ்வியல் கூறுகள் ஆகியவை அடங்கி இருக்கின்றன. 
காஞ்சி பட்டு சேலைகளில் அடிக்கடி நெசவு செய்யப்படும் வடிவம் அன்னப்பட்சி ஆகும். பட்டுசேலைகளின் மத்தியில் பெரிய அளவு கொண்டதாகவோ அல்லது சேலைகளின் கரை மற்றும் முந்தானை ஆகிய பகுதிகளிலோ அழகாக தோற்றம் அளிக்கும் அன்னப்பட்சி வடிவங்கள் உலக அளவில் பிரபலம். 

டைட்டன் அறிமுகம் செய்துள்ள 34 எம்.எம் கேஸ் அளவு கொண்ட கைக்கடிகாரங்களில் ஒரு பாதி பகுதியில் அன்னப்பட்சியின் எம்ப்ராய்டரி வடிவம் அழகாக இடம்பெற்றுள்ளது. கடிகாரத்தின் மறுபாதியில் முத்துச்சிப்பியின் ஒளிரும் பளபளப்பு கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, பட்டு சேலையின் கரைகளை அழகாக வெளிப்படுத்தும் அன்னப்பறவை இந்த வடிமைப்பின் அடிப்படையாக அமைந்துள்ளது. 

                      உலக அளவில் புகழ்பெற்றவையாக தமிழக கோவில்கள் இருந்து வருகின்றன. அவற்றில், மகாபலிபுரம் கற்கோவில், தஞ்சை பெரிய கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், மதுரை மீனாட்சி கோவில் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.¬ அவை, திராவிட கட்டிடக்கலையை வெளிப்படுத்தும் முதன்மை ஆதாரங்களாகவும் இருகின்றன. 
¬¬
அவற்றில் உள்ள சிற்பங்கள் மற்றும் கட்டிட அமைப்பு ஆகியவற்றில் ‘யாளி‘ என்ற தெய்வீக விலங்கு மற்றும் மேற்கூரைகளில் வரையப்பட்டுள்ள விரிந்த தாமரைப்பூ வடிவங்கள் ஆகியவை பொதுவான அம்சங்களாக உள்ளன. அவற்றில், தாமரைப்பூ வடிவமானது பூரண கும்பத்தை குறிப்பதாக சொல்லப்படுகிறது.

‘யாளி’ என்பது தென்னிந்திய கோவில் சிற்பக்கலை வடிவமைப்புகளில் பரவலாக காணப்படும் புராண ரீதியான ஒரு படைப்பாகும். அவை, பெரும்பாலும் கோவில் கல் தூண்களில் செதுக்கப்படிருக்கும். அதன் ஒரு பகுதி சிங்கமாகவும், இன்னொரு பகுதி யானை போலவும், மற்றொரு பகுதி குதிரை போன்றும் உருவகம் செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் சிம்ம முகத்துடன் இறக்கைகள் கொண்ட வடிவமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ‘யாளி’ என்பது நேர்மறை சக்தி கொண்டதாகவும், அசுரர்களை அழிக்கும் குறியீடாகவும் சொல்லப்படுகிறது.   

டைட்டன் அறிமுகம் செய்துள்ள 40 எம்.எம் கேஸ் கொண்ட கைக்கடிகாரங்கள் தாமரை வடிவமைப்புடன் கூடிய நாள் காட்டியும், கோவில் தூண்களில் உள்ள யாளி வடிவமும் கொண்டு கண்கவரும் அழகுடன் இருக்கின்றன.

                 தொன்மையான தமிழ் மொழியின் எழுத்து வடிவமானது மிக நீண்ட காலங்களாக உலகில் இருந்து வந்துள்ளது. தமிழ் இலக்கியங்கள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக வழக்கில் உள்ளன. ஏ.கே. ராமானுஜன் என்ற மொழியியல் ஆய்வாளர், ‘இன்றைய காலகட்டத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரே இந்திய மொழியான தமிழ் கடந்த கால பண்பாட்டின் தொடர்ச்சியாகவும் விளங்கி வருகிறது..’ என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்து புராணங்களின்படி, தமிழ் அன்னையாக குறிப்பிடப்படும் தமிழ் மொழி கடவுளான சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், தமிழ் மக்களின் கலாச்சார அடையாளமாகவும் தமிழ் மொழி விளங்கி வருகிறது.

தமிழ் மொழியை சிறப்பிக்கும் விதமாக டைட்டன் தனது தயாரிப்பான 40 எம்.எம் கேஸ் அளவுள்ள கைக்கடிகாரங்களில் மணியை எண்களில் குறிப்பிடுவதற்கு பதிலாக, தமிழ் மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

                 ‘நம்ம தமிழ்நாடு‘ கைக்கடிகாரங்களுக்கான அறிமுக விழா நவம்பர் 14-ம் நாளன்று சென்னை தாஜ் கன்னிமரா ஓட்டலில் நடைபெற்றது. அதில், ஷோபனா, கணேஷ் மற்றும் வாணி போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

                ‘நம்ம தமிழ்நாடு‘ கைக்கடிகாரங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டைட்டன் விற்பனையகங்களிலும் கிடைக்கும். மேலும், titan.co.in என்ற டைட்டன் இணையதளம் மூலம் உலகத்தின் எந்த நாட்டிலிருந்தும் கைக்கடிகாரங்களை வாங்க இயலும்.