அட்வெர்ட்டோரில் செய்திகள்

இருளைப் பற்றி பயம் எதற்கு? பெண்ணே  நீயே வெளிச்சமாகு ...  #ShineOnGirl

இருளைப் பற்றி பயம் எதற்கு? பெண்ணே நீயே வெளிச்சமாகு ... #ShineOnGirl + "||" + advertorial: Jos Alukkas shine on girl-Advertorial

இருளைப் பற்றி பயம் எதற்கு? பெண்ணே நீயே வெளிச்சமாகு ... #ShineOnGirl
முன்னணி நகை தயாரிப்பு நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில் பெண்களின் பெருமையை போற்றும் 'shine on - girl' விளம்பரம்  தயாரிக்கப்பட்டுள்ளது. இது சமூகத்தில் போராடும் பெண்களுக்கு ஊக்கம் தருவதாக அமைகிறது.

பீனிக்ஸ் பறவையாக பெண்கள் : 
பல ஆண்டுகளாக இச்சமூகத்தில் பெண்கள் பலவிதமான பாகுபாடுகள் மற்றும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்களது குரல்களும் அடங்கி ஒடுங்கி இருக்கின்றன. பெண்களின் கருத்துக்கள் குறைவாகவே மதிப்பிடப்பட்டு வருகின்றன. தனக்கான அடிப்படை சுதந்திரத்தையும் அனுபவிக்க பெண்கள் பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கலாசார எதிர்பார்ப்பு எனும் பெயரிலும், பாலின பாகுபாடுகளாலும் தனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ முடியாமல், இந்த சமூகத்தில் பின்தங்கி இருப்பதே பெண்களின் வாடிக்கையாக இருக்கிறது. இத்தகைய பாகுபாடுகளால் தன்னம்பிக்கையுடன் செய்யக்கூடிய செயல்களையும் செய்யமுடியுமா? என்ற கேள்வியுடனேயே பெண்கள் இருக்கிறார்கள்.

என்னதான் அடிபட்டாலும் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர் பெற்று எழும் பீனிக்ஸ் பறவையாக பெண்கள் தங்களை உருவேற்றி கொள்கிறார்கள் என்பதே நிதர்சன உண்மை. தூய்மை பணியில் இருந்து பொழுதுபோக்கு மற்றும் பேஷன் தொழில்துறை வரை முழுமையான நம்பிக்கையுடன், தன்னம்பிக்கை இழக்காமல், மனச்சோர்வு சிறிதும் இல்லாமல் ஆர்வமும் குன்றாமல் பெண்கள் சாதித்து வருகிறார்கள். இதன் மூலம் சமூக விதிமுறைகளையும், சடங்கு எனும் பெயரிலான மூடநம்பிக்கைகளையும் அச்சமின்றி எதிர்த்து போராடி பெண்கள் வெற்றி கண்டு வருகிறார்கள்.

ஜோஸ் ஆலுக்காஸ்-ன் புதிய படம்:
அத்தகைய மகளிர் சக்தியை உலகுக்கு எதிரொலிக்க செய்யும் வகையிலும், அவர்களின் தன்னம்பிக்கையின் பலத்தை உலகறிய செய்யும் வகையிலும் முன்னணி நகை தயாரிப்பு நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் 'shine on - girl' எனும் ஒரு படத்தை தயாரித்து இருக்கிறது. படத்தின் தொடக்கமே, ஒரு கண்டிப்பான தாய் டியூசனுக்கு  செல்லும் தனது மகளிடம், 'எத்தனை தடவை சொல்வது... நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க...' என்று கூறி உடைக்கு மேல் துப்பட்டா அணிந்து செல்லுமாறு நிர்பந்திக்கிறார்.

'6 மணிக்கு மேல் ஒரு பெண்ணுக்கு வெளியே என்ன வேலை?', என வேலைக்கு சென்று வரும் இளம் பெண்ணை சிலர் விமர்சிக்கிறார்கள். அடுத்த காட்சியில் ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதியிடம், தனது குடியிருப்பு பகுதியில் நிலவும் பிரச்சினை குறித்து ஒரு குடும்ப பெண்மணி பேச முயல்கிறார். ஆனால், 'உனக்கு இது தேவையில்லாத விஷயம். நீ பேசி இந்த உலகம் கேட்க போகிறதா?' என்று அவரது கணவர் முட்டுக்கட்டை போடுகிறார். விளையாட்டு பயிற்சியில் ஈடுபட வரும் பெண் ஆசிரியையிடம், 'உங்களுக்கு சரியான இடம் வகுப்பறை தான், மைதானம் அல்ல', என்று கூறி பயிற்சியாளர் ஏளனமாக சிரிக்கிறார். இறுதியாக படத்தில் மாடல் வாய்ப்பு கேட்டு நடிகை திரிஷா ஒரு தயாரிப்பாளரிடம் செல்கிறார். 'நீ மாடலா? நேரத்தை வீணடிக்காதே', என்று அந்த தயாரிப்பாளர் கூறிவிடுகிறார்.
மேற்கண்ட காட்சிகள் மூலம் மூலம் பெண்கள் தினம் சந்திக்கும் ஒரு சமூகப் பிரச்சினையை இப்படம் மிக அழகாக முன்னெடுத்துச் செல்கிறது.

தங்கத்தை போல மின்னும் பெண்கள் : 
அடுத்தடுத்த காட்சிகளில் நடிகை திரிஷா தனது தன்னம்பிக்கையால் மாடல் உலகில் மின்னுவதை படம் தெளிவாக உணர்த்துகிறது. அதேபோல சமூகத்துக்கு பயப்படாமல் தன்னம்பிக்கையுடன் டியூசன் செல்லும் மாணவி, வேலை முடிந்து துணிச்சலுடன் இரவில் வீடு திரும்பும் இளம்பெண், தைரியமாக அரசியல்வாதியிடம் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி அவரை ஓடவிடும் குடும்ப பெண்மணி, விளையாட்டில் எதிரணியினரின் வெற்றியை தட்டிப் பறிக்கும் ஆசிரியை என பெண்களின் துணிச்சலையும், தன்னம்பிக்கையுடன் அவர்கள் பெரும் வெற்றியையும் படம் எடுத்துச் சொல்கிறது.

ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் பெண்ணியத்தின் பெருமை கூறும் இந்த படம், ஒவ்வொரு துறைகளிலும் தடைகளை உடைத்து பெண்கள் எவ்வாறு முன்னேறிச் செல்கிறார்கள்? என்பதை ரசிக்கும்படியாக சொல்கிறது. இன்றைய காலத்தில் வேண்டிய உடை, நகைகள் போன்றவற்றை பெண்கள் விருப்பத்துடன் தேர்வு செய்ய முடிகிறது. திருமணம் தொடங்கி குழந்தை பெறுவது வரை பெண்களின் தீர்மானத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது. பெண்கள் அச்சமின்றி வாழ்கிறார்கள். விரும்பும் வாழ்க்கையை உருவாக்கி அதில் பெருமை அடைகிறார்கள். வாழ்க்கை எனும் போரில் அசாத்திய வீரர்களாக வலம் வரும் பெண்களை பார்த்து ஜோஸ் ஆலுக்காஸ் பெருமிதம் கொள்கிறது. தங்களது நகைகளைப் போலவே பிரகாசமாக மின்னும் பெண்களை, ஜோஸ் ஆலுக்காஸ் போற்றி வணங்குகிறது.

எட்டு திசையும் பாராட்டும்:
நெருப்பில் விழுந்தாலும் தங்கத்தின் பிரகாசம் குறைவதில்லை. அதுபோல ஒவ்வொரு பெண்ணாலும் நிச்சயம் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டு பிரகாசிக்க முடியும். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, இந்த சமூகம் முடிவு செய்யக்கூடாது என்ற அழுத்தமான நம்பிக்கை இந்தப்படம் பெண்கள் மனதில் விதைக்கிறது. நாலு சுவற்றுக்குள் முடங்கி விடாமல் எட்டு திசையும் பார்த்து பாராட்டும் வகையில் திகழ வேண்டுமென பெண்களுக்கு ஊக்கம் தருவதாக இந்த படம் அமைந்திருக்கிறது. 'இருளை பார்த்து பயப்பட வேண்டாம், நீயே இந்த உலகுக்கே வெளிச்சமாக மாறு', என்ற அழுத்தமான வார்த்தைகளுடன் இந்த படம் முடிவடைகிறது. இந்த படம் தன்னம்பிக்கையுடன் பிரச்சனைகளை எதிர்கொண்டு துவண்டு விடாமல் போராடி வரும் பெண்களுக்கு நிச்சயம் ஒரு சமர்ப்பணம் என்றால் அது மிகையல்ல.

ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் இந்தப் படம் யூ-டியூப்   லிங்க் விவரம் பின்வருமாறு:-

வீடியோ  : https://www.youtube.com/watch?v=8SBl6PsJq1c&feature=youtu.be

Youtube    : https://www.youtube.com/channel/UC8aBHFi8Bd7kmXf-FXQl96A

Facebook  : https://www.facebook.com/josalukkasjewellery

Instagram : https://www.instagram.com/josalukkas/

Twitter      : https://twitter.com/josalukkas_

Hash TAG : #josalukkas #womenpower #shineon
 

Landing page  : https://www.josalukkasonline.com/girl-you-shine-brighter-than-gold?utm_source=Thanthi&utm_medium=Tamil_Nadu_exc_Chennai&utm_campaign=Girl_you_shine_brighter_than_Gold&utm_content=Advertorial

Disclaimer: The article has been produced on behalf of Jos Alukkas