முன்னேற்றம் கூடும் நாள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
9.4.2021 முதல் 15.4.2021 வரை
சில விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடைபெறாமல் போகலாம். குடும்பத்தில் சிறுசிறு சல சலப்பு உண்டாகும். நீண்ட நாட்களாக சந்திக்க எண்ணிய ஒருவரை சந்திப்பீர்கள். நிதானப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும். உத்தியோக மாற்றத்தை தேடிச் செல்ல வேண்டாம். கணவன்-மனைவி உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.
பங்குனி மாத ராசிபலன்கள் 14.3.2021 முதல் 13.4.2021 வரை
விருச்சிக ராசி அன்பர்களே!
சார்வரி வருடம் பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியைப் பார்க்கின்றார். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். மேலும் குருவின் பார்வையும் செவ்வாய் மீது பதிவதால் ‘குருமங்கள யோகம்’ ஏற்படுகின்றது. எனவே பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும்.
உச்ச சுக்ரன் சஞ்சாரம்
மார்ச் 18-ந் தேதி உங்கள் ராசிக்கு 5-ம் இடமான மீனத்தில், சுக்ரன் உச்சம் பெற்று சஞ்சரிக்கப் போகின்றார். 7, 12-க்கு அதிபதியான சுக்ரன் உச்சம் பெறும் பொழுது வருமானம் திருப்தி தரும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீன புதன் சஞ்சாரம்
மார்ச் 25-ந் தேதி, மீன ராசிக்கு புதன் செல்கின்றார். அது அவருக்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியானவர் புதன். அஷ்டமாதிபதி நீச்சம் பெறுவது நன்மை தான். செலவிற்கேற்ற வரவு வந்து கொண்டேயிருக்கும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள், உங்களுக்கு பல விதங்களிலும் உதவிகளைச் செய்வர். தடைபட்ட காரியங்கள் நடந்தேறும். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கும்ப குருவின் சஞ்சாரம்
ஏப்ரல் 5-ந் தேதி குரு பகவான், கும்ப ராசிக்கு அதிசாரமாகச் செல்கின்றார். குருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே இடமாற்றம், உத்தியோக மாற்றங்கள் திருப்திகரமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தனித்து இயங்க முற்படுவர். அரசுவழி அனுகூலம் கிடைக்கும். அர்த்தாஷ்டம குருவாக இருப்பதால், விரயங்களைச் சுபவிரயமாக மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனமாகும்.
மேஷத்தில் புதன், சுக்ரன் சஞ்சாரம்
ஏப்ரல் 10-ந் தேதி மேஷ ராசிக்குப் புதன் செல்கின்றார். அதேபோல் ஏப்ரல் 11-ந் தேதி சுக்ரனும் அங்கு வருகிறார். இரண்டும் ஒன்று சேரும் பொழுது, ‘புத சுக்ர யோகம்’ உருவாகின்றது. எனவே புதிய திருப்பங்களை காணப்போகிறீர்கள். தொழில் வெற்றி நடைபோடும். துணையாக இருக்கும் நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர். கடன் சுமை பாதிக்குமேல் குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகளால் நன்மை கிடைக்கும். பெண் பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நனவாக்குவீர்கள்.
மிதுன செவ்வாய் சஞ்சாரம்
ஏப்ரல் 13-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிநாதன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் எதைச் செய்தாலும் கொஞ்சம் யோசித்துச் செய்ய வேண்டும். பார்க்கும் தொழிலில் மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களின் கருத்து அறிந்து செயல்படுங்கள். பணிபுரியும் இடத்தில் சகப் பணியாளர்களின் அனுசரிப்பு குறைந்தாலும், மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு இலாகா மாற்றங்கள் வரலாம். இம்மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிவன், உமையவள், நந்தீஸ்வரர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மார்ச்: 14, 15, 23, 24, 25, 28, 29, ஏப்ரல்: 4, 5, 6, 8, 9, 10 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் பொருளாதார விருத்தி அதிகரிக்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றிக் கனியை எட்டுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். ஆரோக்கியம் சீராகும். பணிபுரியும் பெண்களுக்கு யோகமான நேரம் இது. உயரதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பார்கள். சிவராத்திரி நாள் அன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
14.4.2021 முதல் 13.4.2022 வரை
விருச்சிகம்
செல்வ நிலை உயரும் ஆண்டு
(விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை) பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்)
விருச்சிக ராசி நேயர்களே!
பிறக்கும் புத்தாண்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், சுக்ரனோடு பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கின்றார். தொழில் ஸ்தானாதிபதி சூரியன், லாப ஸ்தானாதிபதி புதனோடு இணைந்து புத - ஆதித்ய யோகத்தை உருவாக்குகின்றார். எனவே இந்த ஆண்டு தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக அமையும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். இல்லம் தேடி நல்ல தகவல்கள் எந்த நேரமும் வந்த வண்ணமாகவே இருக்கும்.
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியையே பார்க்கின்றார். எனேவ தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். ஜீவன ஸ்தானத்தில் கூட்டுக்கிரகமாக சூரியன், சந்திரன், புதன், சுக்ரன் சஞ்சரிக்கின்றன. புத - சுக்ர யோகம் இருப்பதால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். வேலைவாய்ப்பில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். இடம் வாங்கி வீடு கட்டும் யோகம் கூட எளிதில் நடைபெறும். குறிப்பாக முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க அஸ்திவாரம் அமைத்துக் கொடுக்கும் ஆண்டாக இந்த ஆண்டு அமையப் போகின்றது.
தற்சமயம் ஏழைரச் சனி விலகிவிட்டதால், இனி தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். துணையாக இருக்கும் நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர். வெற்றிச் செய்திகள் வீடு தேடி வந்து சேரும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். சனி பகவான் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமோ, அதை அந்த நேரத்தில் செய்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை வருடத் தொடக்கத்திலேயே வரலாம். மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.
4-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பது யோகம்தான். அா்த்தாஷ்டம குருவாக இருந்தாலும், அவர் தன ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதி என்பதால் பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்கக்கூடிய சூழ்நிலையும், மறக்க முடியாத சம்பவங்களும் நிறைய நடைபெறும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். பிரபலஸ்தர்கள் உங்கள் பின்னணியாக இருந்து, பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். ஆபரணங்கள் வாங்குவது முதல் அழகான வாகனம் வாங்குவது வரையான யோகம் படிப்படியாக வந்துசேரும்.
ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால் சர்ப்பக் கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கின்றது. எனவே சா்ப்ப சாந்திப் பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலம், சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும். ஜென்ம கேதுவால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் வரலாம். பயணங்கள் அதிகரிக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட எடுத்த புது முயற்சி கைகூடும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலும்.
குருவின் வக்ர இயக்கம்
ஆண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். அதோடு 16.6.2021 முதல் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். 14.9.2021 முதல் 12.10.2021 வரை மகர ராசியில் குருபகவான் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. தன ஸ்தானத்திற்கு அவர் அதிபதி என்பதால், தேவைக்கேற்ப பணம் வந்து கொண்டேயிருக்கும். பொதுவாக உங்கள் ராசியானது, மனதுகாரகன் சந்திரன் நீச்சம் பெறும் ராசியாகும். எனவே இதுபோன்ற காலங்களில் சிந்தனை அதிகரிக்கும். ‘இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா?’ என்ற மனக்குழப்பம் ஏற்படும். பிறருக்கு வாங்கிக் கொடுத்த தொகையை போராடி திரும்பப் பெறக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
குருப்பெயா்ச்சி காலம்
ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குருபகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன்பிறகு 13.4.2022-ல் மீன ராசிக்குப் பெயா்ச்சியாகிச் செல்கின்றார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றிபெறும். வரன்கள் வாசல் தேடிவரும். வெளிநாடு செல்லும் வாய்ப்போ, வெளிமாநிலங்கள் செல்லும் வாய்ப்போ கைகூடலாம்.
குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். எதையும் துணிந்து செய்யும் ஆற்றலால் வெற்றி வாய்ப்புகளைக் காண்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். மனதிலுள்ள தேவையற்ற பயம் விலகும். திட்டமிட்ட பணிகளை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். மேலிடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். போட்டிகளுக்கு மத்தியில் உங்கள் முன்னேற்றம் அதிகரிக்கும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
ராகு-கேது பெயா்ச்சி காலம்
21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 6-ம் இடத்திற்கு ராகுவும், 12-ம் இடத்திற்கு கேதுவும் வருகின்றார்கள். இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்களின் பட்டியலில் உங்கள் பெயரும் இணையும் விதத்தில், நல்ல காரியங்கள் பலவற்றையும் செய்து முடிப்பீர்கள். 6-ல் ராகு இருந்து, குரு கேந்திரத்தில் இருந்தால் ‘அஷ்டலட்சுமி யோகம்’ என்பார்கள். அந்த யோகம் உங்களுக்கு வரப்போகின்றது. எனவே எல்லா வழிகளிலும் நற்பலன்கள் கிடைக்கும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனிபகவான் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனிபகவான். எனவே உடன்பிறப்புகளின் வழியே கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம் இது. வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும் என்றாலும் நம்பிக்கைக்குரிய விதம் இருக்குமா? என்பது சந்தேகம்தான். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல்கள் தோன்றும். உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி காண இயலும்.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய்- சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் பாகப்பிரிவினைகளில் மீண்டும் பிரச்சினை தலைதூக்கும். பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். உடன்பிறப்புகளுக்கும், உறவினர்களுக்கும் நீங்கள் எவ்வளவுதான் நன்மைகள் செய்தாலும், குடும்பத்தினர் குறை கூறிக் கொண்டேயிருப்பர். வீடுமாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை திருப்தி அளிக்கும் விதத்தில் அமையாது. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ளலாம். இடம், பூமி வாங்க நினைப்பவர்கள் பத்திரப்பதிவில் முழுமையாகக் கவனம் செலுத்துங்கள்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு பொன் கொழிக்கும் ஆண்டாக அமையப் போகின்றது. பொருளாதார நிலை உயரும். புதிய வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. கணவன் - மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். கல்யாண முயற்சிகள் கைகூடலாம். தாய் மற்றும் உடன்பிறப்புகள் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பர். பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். சம்பள உயர்வும் உண்டு. ஆனைமுகப் பெருமான் வழிபாடும், ஆறுமுகப் பெருமான் வழிபாடும் நன்மை தரும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
சதுர்த்தி விரதமிருந்து ஆனைமுகப் பெருமானை வழிபடுவதோடு, வெள்ளிக்கிழமை தோறும் கவசம் பாடி சரஸ்வதி, லட்சுமி ஆகிய தெய்வங்களை வழிபட்டு வந்தால் செல்வ வளம் பெருகும்.
27-12-2020 முதல் 20-12-2023 வரை
ஏழரைச்சனி விலகியது, இனிய வாழ்க்கை மலர்கிறது விருச்சிக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான், 26.12.2020 அன்று முன்னேற்றத்தைக் கொடுக்கும் மூன்றாமிடத்திற்கு செல்கின்றார். இப்பொழுது ஏழரைச்சனி விலகி விட்டது. எனவே இனி, தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். துணையாக இருக்கும் நண்பர்களும், உறவினர்களும் தோள்கொடுத்து உதவுவர். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. வெற்றிகள் ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான், இப்பொழுது வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். உங்களின் நீண்டநாள் எண்ணங்கள் நிறைவேறும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் சஞ்சரிக்கின்றார். குரு உங்கள் ராசிக்கு, தன -பஞ்சமாதிபதியாக விளங்குபவர். அவரோடு இப்பொழுது சனி பகவான் இணைந்து ‘நீச்சபங்க ராஜயோக’த்தை உருவாக்குகின்றார். எனவே மனம்போல மங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். செல்வச் செழிப்போடு கூடிய வாழ்க்கை மலரப்போகிறது.
வாய்ப்புகள் வாசல் தேடி வரும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் சனி, முன்னேற்றத்தின் முதல்படிக்கு செல்ல வைக்கப்போகிறார். இதுவரை ஏற்பட்ட தடைகளும், தாமதங்களும் அகலும். தனவரவு அதிகரிக்கும். வாழ்க்கைத் தேவை ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். எதிரிகள் விலகுவர். சகோதர ஒற்றுமை பலப்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புடன் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பதவி வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைத்து உயர் பதவிகளும், சம்பள உயர்வும் கிடைக்கும்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 5, 9, 12 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது. சகாய ஸ்தானத்தில் வீற்றிருந்து பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், பயண ஸ்தானம் ஆகியவற்றைச் சனி பார்க்கிறார். பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு என்ன என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமோ, அவை அனைத்தும் கிடைத்து நிறைவான வாழ்க்கை உருவாகப் போகின்றது. குறிப்பாக திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். துள்ளி விளையாடும் பிள்ளைச் செல்வம் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். புதிய சொத்துக்களின் சேர்க்கையும், வீடுகட்டிக் குடியேறும் அமைப்பும் மனம்போல நடைபெறும்.
சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால், பெற்றோர் வழியில் பிரியம் கூடும்.
சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால், சுப விரயம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டுப் புதிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, அற்புதமான பலன்கள் வந்து சேரும். உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியாக சூரியன் விளங்குவதால் புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். அடுக்கடுக்காக ஒப்பந்தங்கள் வந்து அலைமோதும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். அதுமட்டுமல்லாமல் புதிதாக வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, செய்யும் தொழில் சீராக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரப் போட்டிகள் அகலும். வீடு மாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் விரும்பிய வண்ணம் வந்து சேரும். நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வுகள் இப்பொழுது கிடைக்கும். குடும்பத்தை விட்டுப்பிரிந்து வேலைபார்த்து வந்தவர்கள், இனி ஒன்றுசேரும் வாய்ப்பு உண்டு. இக்காலத்தில் கும்ப ராசிக்கு சனி செல்கின்றார். அர்த்தாஷ்டமச் சனியாக சனி பகவான் வந்தாலும், கும்ப ராசி அவருக்கு சொந்த வீடு என்பதால் நன்மைகளையே வழங்குவார். சொல்லும் சொற்கள் எல்லாம் வெல்லும் சொற்களாக மாறும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி வருகின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வெற்றி நடைபோடும். வருமானம் திருப்தி தரும். மீனத்தில் குரு வரும்பொழுது, உங்கள் ராசியையே பார்க்கப் போகின்றார். எனவே ஆரோக்கியம் சீராகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, கொஞ்சம் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரிப்பு குறையும். கொடுத்த கடன்களால் பிரச்சினைகள் ஏற்படும்.
ராகு-கேது பெயர்ச்சிக்காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் புதியபாதை புலப்படும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வழக்கமான பணிகளில் ஏற்பட்ட சுணக்கம் அகலும். 12-ல் கேது சஞ்சரிப்பதால் ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டில் இருக்கும் உறவினர் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். ஆன்மிகத்திற்கு என்று அதிக தொகையைச் செலவிடு வீர்கள். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
சதுர்த்தி விரதமிருந்து ஆனைமுகப் பெருமானை வழிபடுவதோடு, சஷ்டி அன்று முருகப்பெருமானையும் வழிபட்டு வாருங்கள். இல்லத்து பூஜை அறையில் வராகி படம் வைத்து, வராகி கவசம் பாடி வழிபட்டால் வசதி வாய்ப்புகள் பெருகும். வளர்ச்சியும் அதிகரிக்கும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரம் அடைகின்றார்.
இக்காலத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ளமாட்டார்கள். எவ்வளவுதான் நன்மை செய்தாலும் குடும்பத்தினர் குறைகூறிக்கொண்டே இருப்பர். விரயங்கள் அதிகரிக்கும். அலைச்சலைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது, யோசித்து செயல்படுங்கள்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சியாகவே இருக்கின்றது. ஏழரைச்சனி விலகி விட்டதால் இனி இல்லம் தேடி நல்ல தகவல்கள் வந்துசேரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பொருளாதார நிலை உயரும். ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல்கள் அதிகரிக்கும். கணவன் -மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதியும், கல்யாண முயற்சி கருதியும் நீங்கள் எடுத்த செயல்களில் வெற்றி கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு, உத்தியோக உயர்வும், ஊதிய உயர்வும் உண்டு. தாய் மற்றும் உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து குடும்ப முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர்.
01.09.2020 முதல் 20.03.2022 வரை
கேது உங்கள் ராசியிலே..கீர்த்தியும் புகழும் இனிச்சேரும்..
விருச்சிக ராசி நேயர்களே!
ராகு-கேதுக்களின் பெயர்ச்சி செப்டம்பர் 1-ந் தேதி நிகழவிருக்கின்றது. அந்த மாற்றத்தின் விளைவாக மிகுந்த நற்பலன் அடையும் ராசிகளில் ஒன்றாக உங்கள் ராசி அமைகிறது. காரணம், இதுவரை அஷ்டமத்தில் ராகுவும், 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த கேதுவும் நிலை மாறி ஜென்ம கேதுவும், சப்தம ராகுவுமாக வருகிறார்கள்.
உங்கள் ராசியைப் பொறுத்தவரை தற்போது நடந்து வரும் ஏழரைச் சனி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. எனவே உங்கள் எண்ணங்கள் எல்லாம் ஈடேறும். நவம்பர் 15-ந் தேதி மகர ராசிக்கு குரு செல்கின்றார். அதன்பிறகு டிசம்பர் 26-ந் தேதி மகர ராசிக்குச் சனி செல்கின்றார். இப்பொழுது ஏழரைச் சனி முழுமையாக விலகிவிட்டது. எனவே தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். தொழில் வளம் மிகச்சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். அதன்பிறகு 2021-ம் வருடம் நவம்பர் மாதம் 13-ந் தேதி கும்ப ராசிக்கு குரு செல்கின்றார். அப்பொழுது அவர் உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார்.
நல்ல திருப்பம் தரும் ராகுநம்பிக்கைகள் நடைபெறும் கேது
ராகு இப்பொழுது சஞ்சரிக்கப் போகும் இடம் ஏழாமிடமாகும். இது ‘களத்திர ஸ்தானம்’ என்று அழைக்கப்படும் இடமாகும். எனவே திருமண வயது வந்த ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி நல்ல வரன்கள் வந்து சேரும். மங்கல ஓசை இல்லத்தில் கேட்கும் வாய்ப்பு உருவாகும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். அரசியலில் செல்வாக்குள்ள ஒருவர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். வெளிநாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கி மகிழும் யோகமும் உண்டு.
ஜென்மத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் சிந்தனை ஆற்றல் அதிகரிக்கும். செலவுகளை யோசித்துச் செய்வீர்கள். சிறுசிறு விரயங்கள் வந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதற்கேற்ற விதத்தில் வரவுகள் உங்களுக்கு வந்துசேரும். சமூகப்பற்று மிக்க உங்களுக்கு நல்ல பதவிகள் கிடைக்கலாம். உயர் அதிகாரிகளின் பழக்கத்தால் ஒருசில காரியங்கள் விரைவில் நடைபெறும். உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை.
செவ்வாய் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 4.1.2021வரை)
மிருகசீர்ஷ நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, வருமானம் கூடுதலாக இருக்கும். நவீன பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. தொழில் வெற்றிநடை போடும். கவுரவப் பதவிகள் கிடைக்கலாம். கட்டிடம் கட்டும் யோகமும் கைகூடும். உடல்நலம் சீராகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு.
சந்திரன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (5.1.2021 முதல் 12.9.2021 வரை)
உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திற்கு அதிபதி சந்திரன் ஆவார். பொதுவாக ஒன்பதாமிடம் என்பது பிதுர்ரார்ஜித ஸ்தானம் மட்டுமல்ல, ஞானம், கல்வி, தீர்த்த யாத்திரை, தெய்வ அனுகூலம், தந்தை வழி உறவுகள், தந்தைவழி சொத்துக்கள், ஆலயத்திருப்பணி, கடல் கடக்கும் வாய்ப்பு, பயணங்களால் பலன், பொன், பொருள் சேர்க்கை ஆகியவற்றை எல்லாம் குறிக்கும் இடமாகும். எனவே அதன் சாரத்தில் ராகு வரும்பொழுது எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தந்தை வழி உறவில் ஆதாயம் உண்டு. ஊதிய உயர்வுடன் உத்தியோகம் அமையும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும்.
சூரியன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (13.9.2021 முதல் 20.3.2022 வரை)
கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, அற்புதமான பலன்கள் கிடைக்கும். தொழில் ஸ்தானாதிபதியாக சூரியன் விளங்குவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரப் போட்டிகள் அகலும். பணியாளர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புகழ், கவுரவம் கூடும். அரசு வழிகளிலும் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்
ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் கேது பகவான் முதலில் புதன் சாரத்திலும், பிறகு சனி சாரத்திலும், அதன்பிறகு குரு சாரத்திலுமாக சஞ்சரிக்கப் போகின் றார். ‘நிழல் கிரகம்’ என்று வர்ணிக்கக் கூடிய கேது பகவான், நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வாரா என்று பார்ப்போம். பாதசார அடிப்படையில் பகை கிரகத்தின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, அதற்குரிய பரிகாரங்களையும், வழிபாடுகளையும் செய்தால் நற்பலன்களைப் பெற முடியும்.
புதன் சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 9.5.2021 வரை)
புதன், உங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியாவார். எனவே தடைப்பட்ட காரியங்கள் தடையின்றி நடக்கும். வியாபாரத் தொடர்புகள் விரிவடையும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். சேமிப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வும், சலுகைகளும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். சேமிப்பு அதிகரித்து சுபகாரியங்களுக்காகச் செலவிடுவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் மகத்தான பலன் கிடைக்கும். இளைய சகோதரத்தின் ஒத்துழைப்பு உண்டு. ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாகவும், லாபம் தரும் விதத்திலும் அமையும்.
சனி சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (10.5.2021 முதல் 16.1.2022 வரை)
உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். சகாய ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான சனியின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, சகோதர ஒற்றுமை பலப்படும். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடிவரும். கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். கடல் தாண்டும் முயற்சி கைகூடும். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். இடம், பூமியால் ஆதாயம் உண்டு. வீடு கட்டும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். உடல் நலம் சீராக உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.
குரு சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (17.1.2022 முதல் 20.3.2022 வரை)
குரு பகவான், உங்கள் ராசிக்கு தன பஞ்சமாதிபதிஆவார். எனவே அவர் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது செல்வநிலை உயரும், செல்வாக்கு மேலோங்கும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். இல்லம் தேடி நல்ல தகவல் வரலாம். கல்யாணக் கனவுகள் நனவாகும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். தேவைக்கேற்ற பணம் வந்துகொண்டே இருக்கும். மற்றவர்கள் பாராட்டும் படியான காரியங்களைச் செய்து மகிழ்ச்சியடைவீர்கள்.
வளர்ச்சி தரும் வழிபாடு
ஜென்ம கேதுவால் சிறப்பான பலன்களை பெறவும், சப்தம ராகுவால் சந்தோஷங்கள் அதிகரிக்கவும், சதுர்த்தியன்று விநாயகரையும், மூலம் நட்சத்திரமன்று அனுமனையும் வழிபடுங்கள். பூஜையறையில் சரஸ்வதி படத்துக்கு மாலை சூட்டி கலைவாணி கவசம் பாடி வழிபடுவதோடு, லட்சுமி படம் வைத்து அஷ்டலட்சுமி கவசமும் பாராயணம் செய்யுங்கள்.
பெண்களுக்கு...
ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப் போகின்றது. உடல்நலம் சீராகும். ஏழரைச் சனி விலகுவதால் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நடைபெறும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். தாய்வழி ஆதரவும், சகோதர ஒற்றுமையும் சிறப்பாக உள்ளது. சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். குலதெய்வ வழிபாடும், ராகு-கேதுக்களுக்கு உரிய சிறப்பு வழிபாடும் முன்னேற்றம் தரும்.
15-11-2020 முதல் 13-11-2021 வரை
இரண்டில் வந்தது குரு பகவான், இனிமேல் வெற்றிக்கொடி பறக்கும்!
விருச்சிக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று மூன்றாமிடத்திற்கு வருகின்றார். ‘3-ம் இடத்தில் குரு வரும்பொழுது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்’ என்பார்கள். 3-ம் இடத்தில் குரு நீச்சம் பெற்றாலும், அவர் பார்வை பதியும் இடங்கள் சிறப்பாக அமைவதால் சந்தோஷங்களையே நாளும் சந்திக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. தொழில் வளர்ச்சியும், திருப்திகரமான வருமானமும் ஏற்படும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து நல்ல காரியங்களை முன்னின்று நடத்திக்கொடுப்பர். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். இடையில் குரு பகவான் 4-ம் இடத்திற்கும் செல்கின்றார். சிலநாட்கள் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். சுய ஜாதகத்தில் திசாபுத்தி பலம்பெற்றிருப்பவர்களுக்கு தொழில் விருத்தியும், செல்வாக்கும் அதிகரிக் கும். வக்ர காலத்தில் வாழ்க்கைப் பாதை சீராக, குரு கவசம் பாடி, குரு பகவானை வழிபடுவது நல்லது.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களையும் பார்க்கின்றார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் பதிவதால் இல்லறம் நல்லறமாக அமையும். வாழ்க்கையில் வசந்தம் உருவாகும். மனையில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு. தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். ஏழரைச்சனி விலகும் நேரம் என்பதால் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் அனுகூலமான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீடு, வாகனங்கள் வாங்க உதவிகேட்டு விண்ணப்பித்திருந்தால், நல்ல பதில் இப்பொழுது கிடைக்கும்.
குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பாக்ய ஸ்தானம் பலம் பெறுகின்றது. எனவே, எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமென்று நினைத்தீர்களோ அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தந்தைவழி உறவு வலுப்பெறும். தீர்த்த யாத்திரைகள், தெய்வ வழிபாடுகள் போன்றவற்றில் நம்பிக்கை அதிகரிக்கும். முன்னோர்கள் கட்டிவைத்த ஆலய திருப்பணிகளை முறையாகக் கவனித்து, மக்கள் சேவையின் மூலம் மகத்தான புகழைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றிபெறும். ‘படித்து முடித்த படிப்பிற்கேற்ற வேலை இல்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கும்.
குருவின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால், லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. தொட்டது துலங்கும், தொழில் வளம் சிறக்கும். பணியாளர்கள் இப்பொழுது உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். சங்கிலித்தொடர் போல வந்த கடன் சுமை குறையும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். பூமி வாங்கும் யோகம் முதல் புதிய தொழில் தொடங்கும் யோகம் வரை எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். மூத்த சகோதரத்தின் அனுகூலம் உண்டு.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு அதிபதியானவர், சூரியன். அதாவது தொழில் ஸ்தானாதிபதியாக விளங்குகிறார். அவரது ஸ்தானத்தில் தன பஞ்சமாதிபதியான குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். பொருளாதார நிலை உச்சம்பெறும். வாழ்க்கைத் துணைக்கு வேலை சம்பந்தமாக முயற்சி செய்திருந்தால், அதில் வெற்றி கிடைத்து உதிரி வருமானங்களும் வந்து சேரும். ‘பிள்ளைகளுக்கு அரசு வேலை கிடைக்கவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது அவர்கள் எழுதும் தேர்வில் வெற்றி கிடைத்து அரசாங்க வேலை கிடைக்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விரும்பிய பதவி உயர்வும், கேட்ட சலுகைகளும் கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திற்கு அதிபதியானவர், சந்திரன். எனவே அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை முடிவடையாத காரியங்கள், இப்பொழுது எளிதில் முடிவடைந்துவிடும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவும், அருகில் உள்ள நண்பர்களின் ஆதரவும் கூடுதலாகக் கிடைக்கும் நேரமிது. தொழிலை விரிவு செய்யும் முயற்சி பலன் அளிக்கும். வெளிநாட்டு தொடர்புகளாலும் லாபம் உண்டு. என்றைக்கோ குறைந்த விலையில் வாங்கிப் போட்ட சொத்து, இப்பொழுது நினைக்க இயலாத அளவிற்கு விலை உயர்ந்து அதன் விற்பனை மூலம் ஒரு பெரும் தொகை உங்களுக்கு கிடைக்கலாம். எண்ணங்களுக்கு வலிமை தரக்கூடியவர் சந்திரன் என்பதால் இக்காலத்தில் நேர்மறைச் சிந்தனைகளையே அதிகம் நினைப்பது நல்லது.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆவார். தைரியகாரகன் என்றும், சகோதர பூமிகாரகன் என்றும் செவ்வாயை அழைப்பது வழக்கம். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சகோதரர்களின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். முன்னோர் வழிச் சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆடை, அணிகலன்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வதாகச் சொல்வார்கள். உடன்பிறப்புகளின் திருமணங்களை முன்னின்று நடத்திவைப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊர் மாற்றங்கள், இடமாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்துசேரும். புதிய வாகனங்கள் வாங்கி மகிழும் யோகம் உண்டு.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். அப்பொழுது அவர் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. குரு பார்வைக்கு பலன் அதிகம் என்பதால், அந்த மூன்று இடங்களுக்குரிய ஆதிபத்யங்களும் முன்னேற்றத்தை வரவழைத்துக் கொடுக்கும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிநிரந்தரம் பற்றிய சலுகைகள் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு இடமாறுதல்கள் கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். வெளிநாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். கும்பம், மகரம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். இந்த வக்ர காலத்தில் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு செயல்படுவது நல்லது. தன பஞ்சமாதிபதியான குரு பகவான் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படலாம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. குடும்பச்சுமை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுடைய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். அப்படி ஒப்படைத்தால் அது மீண்டும் உங்களிடமே வந்து சேரும். விரயங்கள் அதிகரிக்கும் இந்த நேரத்தில், உங்களுக்கு அதிகம் விழிப்புணர்ச்சி தேவை.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு
இல்லத்து பூஜை அறையில் விநாயகப்பெருமான் படம் வைத்து, விநாயகர் கவசம் பாடி அவரை வழிபடுவதுடன், சதுர்த்தி விரதம் இருப்பதும் நன்மை தரும். மேலும் வியாழக்கிழமைதோறும் குரு வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு, இந்தக் குருப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சியாகவே உள்ளது. பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். கல்யாணக் கனவுகள் நனவாகும். தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்பட்டு சச்சரவு வளராமல் பார்த்துக்கொள்வது நல்லது. பெற்றோர்களின் ஆதரவு திருப்தி தரும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமை தரும். உங்கள் பெயரிலேயே இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு பதவி உயர்வோடு கூடிய இடமாற்றம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
எங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு
Paper Ad Tariff | Web Ad Tariff | Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2021, © Daily Thanthi | Powered by VishwakAstrology
4/11/2021 10:51:01 AM
http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Scorpio