தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள "அரபி" திரைப்பட டீசர் வெளியானது..!!
"அரபி" திரைப்பட டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை,
வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி பல படங்கள் உருவாகி வெற்றிப் பெற்றுள்ளது. அந்த வகையில் கன்னட மொழியில் உருவாகியுள்ளது 'அரபி'. இப்படம் தன்னுடைய இரண்டு கைகளையும் இழந்த நிலையிலும் விடாமுயற்சியினால் சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கையை கருபொருளாக வைத்து உருவாகி உள்ளது.
இப்படத்தை பிரபல கன்னட இயக்குனர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரடொக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் தமிழ்நாடு பாஜக தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, விஸ்வாஷின் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார்.
இந்நிலையில் 'அரபி' படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. அண்ணாமலை சினிமாவில் புதிய அவதாரம் எடுத்துள்ளது அவருடைய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த டீசர் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.