"20 வருட திரைப்பயணம் - பக்கபலமாக உள்ள ரசிகர்களுக்கு நன்றி" - தனுஷ் நெகிழ்ச்சி பதிவு
பிறந்தநாளில் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த திரைப்பிரபலங்கள், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் நேற்று தன்னுடைய 40-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த திரைப்பிரபலங்கள், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
"எங்கிருந்து தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்காக நேரம் ஒதுக்கி வாழ்த்து தெரிவித்த என்னுடைய நலம் விரும்பிகள், திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் எனக்கு வாழ்த்து தெரிவித்த என்னுடைய ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்களுடைய நிபந்தனையற்ற அன்பு, ஊக்கம் மற்றும் ஆதரவிற்காக பெரிய நன்றி.
கடந்த 20 ஆண்டுகளாக எனது ரசிகர்கள்தான் எனது ஆதரவின் தூண்கள். உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களையும் பார்க்கும் போது நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் நன்றியுடனும் உணர்கிறேன்.
விரைவில் திரைப்படங்களில் சந்திப்போம்" இவ்வாறு கூறியுள்ளார்.