விரைவில் முக்கிய அறிவிப்பு வெளிவரும் டுவிட்டரில் கமல்ஹாசன் தகவல்


விரைவில் முக்கிய அறிவிப்பு வெளிவரும் டுவிட்டரில் கமல்ஹாசன் தகவல்
x
தினத்தந்தி 19 July 2017 5:15 AM IST (Updated: 19 July 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாக சமீபத்தில் கூறினார்.

சென்னை,

இதற்கு அ.தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர் தொடர்ந்து தமிழக அரசு மீது அவதூறாக பேசினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என சில அமைச்சர்கள் கூறினர்.

அமைச்சர்களின் பேச்சுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பல தலைவர்கள், சினிமா பிரமுகர்கள் அறிக்கை, பேட்டி அளித்தனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் நேற்று இரவு டுவிட்டரில் ஒரு தகவல் வெளியிட்டார். அதில், ‘‘அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்’’ என குறிப்பிட்டு உள்ளார். மற்றொரு தகவலில், ‘‘இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை’’ என கவிதை நடையில் எழுதியுள்ள அவர் ‘‘முடிவெடுத்தால் யாம் முதல்வர்’’ என்றும் கூறியுள்ளார்.

இதனால் கமல்ஹாசன் அரசியலில் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும், விரைவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story