சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் திரைப்படங்களில் இணைந்து நடித்தது போல், அரசியலிலும் இணைந்து செயல்படுவார்களா? (பி.விஜய்சிங், சென்னை–20)

சினிமாவைப்போல் அரசியலிலும் இருவரும் இணைந்து செயல்படுவார்களா? என்பது நவம்பர் மாதம் 7–ந் தேதி தெரிந்து விடும்!

***

அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை வேட்டை நடக்கிறது என்கிறார்களே...அவரை மணந்து கொள்ள என்ன தகுதி வேண்டும்? (வி.சரவண பாண்டியன், மதுரை)

‘‘கண்டிப்பாக 6 அடி உயரம் இருக்க வேண்டும். அதற்கு மேலும் உயரமாக இருந்தால், சந்தோ‌ஷம். உடல் எடை பற்றி கவலைப்படாதவராக இருத்தல், ஒரு முக்கிய அம்சம்!’’ என்கிறார், அனுஷ்கா!

***

குருவியாரே, விஜய் நடித்து வரும் ‘மெர்சல்,’ என்ன கதை? (எஸ்.செழியன், புதுச்சேரி)

எம்.ஜி.ஆர். நடித்த ‘விவசாயி’ படத்தில், ‘‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்...ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்..?’’ என்று ஒரு பாடல் வரும். அந்த பாடல்தான் ‘மெர்சல்’ படத்தின் கதைக்கரு!

***

ஓணம் பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடிய நடிகை யார்? (சசிதரன், சிவகாமி புரம்)

மியா ஜார்ஜ்!

***

குருவியாரே, ‘குயின்’ இந்தி படத்தை தமிழில் ‘ரீமேக்’ செய்கிறார்களே...அந்த படத்தின் கதாநாயகி உறுதி செய்யப்பட்டு விட்டாரா? (ஆர்.ரவீந்திரன், ஓசூர்)

கடைசியாக, காஜல் அகர்வாலை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது!

***

நயன்தாரா தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா, தெலுங்கு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா? (எம்.ஏழுமலை, ஊட்டி)

நயன்தாரா தமிழ், தெலுங்கு என்று வித்தியாசம் பார்ப்பதில்லை. யார் அதிக சம்பளம் கொடுக்கிறார்களோ, அவர்கள் படத்துக்கு ‘கால்ஷீட்’ கொடுத்து விடுகிறார்!

***

குருவியாரே, நடிகர் சிவகுமார் முதன் முதலில் நடித்த திரைப்படம் எது? எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் அவர் எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்? (எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிக்கலூர்)

சிவகுமார் நடித்த முதல் படம், ‘காக்கும் கரங்கள்!’ அவர், எம்.ஜி.ஆருடன் காவல்காரன், இதய வீணை ஆகிய 2 படங்களில் நடித்து இருக்கிறார். சிவாஜியுடன் உயர்ந்த மனிதன், பாரத விலாஸ், எதிரொலி, காவல் தெய்வம், திருமால் பெருமை, கந்தன் கருணை, ராஜராஜ சோழன், பாபு, மூன்று தெய்வங்கள், மோட்டார் சுந்தரம் பிள்ளை, விளையாட்டு பிள்ளை, பசும்பொன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்!

***

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் யார்–யார்? (ஜே.தாமஸ், தூத்துக்குடி)

ஐஸ்வர்யாராய், ராதிகா சரத்குமார், சுஹாசினி, ஜோதிகா, அமலாபால், சரண்யா பொன்வண்ணன், ரேகா, ரோகிணி, சினேகா!

***

குருவியாரே, உடல் எடையை குறைக்க அனுஷ்கா என்ன செய்கிறார்? (பொன்னுதுரை, கூடுவாஞ்சேரி)

கால் வயிற்றுக்கு சாப்பிடுகிறார். தினமும் ‘ஜிம்’மில் 8 மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார்!

***

ஆர்.வி.உதயகுமார் டைரக்டு செய்த முதல் படம் எது? (எஸ்.ரவிபிரசாத், தர்மபுரி)

‘உரிமை கீதம்!’

***

குருவியாரே, திரிஷா நடித்து அடுத்து திரைக்கு வர இருக்கும் படம் எது? (ஆர்.பாபு, மேட்டூர்)

திரிஷா நடித்து முடித்துள்ள கர்ஜனை, மோகினி, சதுரங்க வேட்டை–2, 96 ஆகிய படங்கள் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன. அடுத்த வெளியீடாக ‘கர்ஜனை’ திரைக்கு வரும்!

***

மறைந்த நடிகரும், டைரக்டருமான மணிவண்ணன், எந்த நடிகரை வைத்து அதிக படங்களை டைரக்டு செய்துள்ளார்? (ரஜினி செந்தில், பாப்பம்பட்டி)

அவருடைய நண்பர் சத்யராஜை வைத்து, மணிவண்ணன் அதிக படங்களை இயக்கியிருக்கிறார்!

***

குருவியாரே, வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘பார்ட்டி’ படம் எந்த நிலையில் உள்ளது? (பி.ஜீவா, போளூர்)

‘பார்ட்டி’ படத்தின் படப்பிடிப்பு பிஜி தீவில் நடக்கிறது. இந்த படத்தில், வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி நடிக்கவில்லை. படத்துக்கு இசையமைக்கிறார். பிஜி தீவில் நடைபெறும் படப்பிடிப்பில் சத்யராஜ், நாசர், ஜெயராமன், ஷாம், சிவா, ஜெய், ரம்யாகிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு தினமும் இரவு நேரங்களில் மட்டும் நடக்கிறது!

***

நகைச்சுவை நடிகர் மனோபாலா தயாரிப்பாளர் ஆனது எப்படி? (இரா.பாஸ்கரன், திருத்துறைப்பூண்டி)

நடித்து சம்பாதித்த பணத்துக்கு கணக்கு காட்ட வேண்டும் அல்லவா? ‘பிஸி’யாக நடித்துக் கொண்டிருக்கும் பல நடிகர்கள் கணக்கு காட்டுவதற்காகவே தயாரிப்பாளர்களாக மாறுகிறார்கள். அந்த பட்டியலில், மனோபாலாவும் இணைந்திருக்கிறார்!

***

குருவியாரே, மிஷ்கின் இயக்கி, விஷால் நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ படத்தில், வேறு எந்த தமிழ் படத்திலும் இல்லாத சிறப்பு அம்சம் இருப்பதாக கூறப்படுகிறதே...அப்படியென்ன சிறப்பு அம்சம் அந்த படத்தில் இருக்கிறது? (என்.ராதாகிருஷ்ணன், பொங்கலூர்)

‘துப்பறிவாளன்’ படத்தின் சிறப்பு அம்சம், சண்டை காட்சி. இதுவரை பார்த்திராத அளவில் ஒரு பயங்கர சண்டை காட்சி, இடம் பெற்றுள்ளது. அந்த சண்டை காட்சிக்காக வெளிநாட்டில் இருந்து ஸ்டண்ட் டைரக்டர் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்!

***

டாப்சி, ஏன் இந்தி படங்களில் கவனம் செலுத்துகிறார்? (ஏ.தினேஷ், அவினாசி)

அவர் எதிர்பார்த்தது, அங்கேதான் கிடைக்கிறதாம்!

***

குருவியாரே, ‘மகளிர் மட்டும்’ படத்தை அடுத்து ஜோதிகா தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறாரா அல்லது இதோடு நடிப்பதை நிறுத்திக் கொள்வாரா? (கே.புகழேந்தி, சீர்காழி)

ஜோதிகா தொடர்ந்து நடிக்க முடிவு செய்து இருக்கிறார். நல்ல கதையம்சம், கதாபாத்திரம் உள்ள படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பது என்று அவர் முடிவெடுத்து இருக்கிறார்!

***

ஜெய்–அஞ்சலி திருமணம் நடக்குமா, நடக்காதா? (டி.ஆர்.மணி, சேலம்)

அவர்கள் இருவருமே திருமணம் பற்றி கவலைப்படவில்லை. இரண்டு பேரும் காதலர்களாக வெளியுலகுக்கு தெரியட்டும். கல்யாணத்தை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று ஜோடியாக சுற்றி வருகிறார்கள்!

***