சினிமா செய்திகள்

சாலையோரத்தில் இறந்து கிடந்த எம்ஜிஆரின் மேக்கப் மேன் + "||" + MGRs Maker Man Dead in the roadside

சாலையோரத்தில் இறந்து கிடந்த எம்ஜிஆரின் மேக்கப் மேன்

சாலையோரத்தில் இறந்து கிடந்த  எம்ஜிஆரின் மேக்கப் மேன்
எம்ஜிஆரின் மேக்கப் மேன் சாலையோரத்தில் இறந்து கிடந்தார்.

நடிகர் எம்ஜிஆர் மற்றும் என்.டி . ராமராவ் ஆகியோருக்கு மேக்கப் மேனாக இருந்த பத்மநாபன் என்பவர் சாலையில் இறந்து கிடந்துள்ளார். பாலக்காட்டை அடுத்துள்ள ஒற்றபாலம் அம்பலபாறை புளியகுன்னு பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் (வயது 85).

பத்மநாபன் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர், மறைந்த ஆந்திர முதல்-மந்திரியும், நடிகருமான என்.டி.ராமாராவ் ஆகியோருக்கு மேக்கப் மேனாக இருந்தவர். சம்பவம் நடைபெற்ற அன்று, தனது நண்பர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி சாலையோரத்தில் விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார். அந்த வழியாக நடந்து சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், பத்மநாபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.