சினிமா செய்திகள்

’கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்திற்கு அழைப்பில்லை’ நடிகர் கமல்ஹாசன் விளக்கம் + "||" + No invite Communist Party meeting Actor Kamal Haasan

’கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்திற்கு அழைப்பில்லை’ நடிகர் கமல்ஹாசன் விளக்கம்

’கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்திற்கு அழைப்பில்லை’  நடிகர் கமல்ஹாசன் விளக்கம்
கேரளாவில் நடக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்திற்கு தனக்கு அழைப்பில்லை என நடிகர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.
சென்னை

கோழிகோட்டில் வரும் சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கமல்ஹாசன் கலந்து கொள்ள போவதாகவும், அக்கட்சியில் இணைய போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறி இருப்பதவாது:- 

கேரள சிபிஎம் விழாவிற்கு அழைக்கப்படவில்லை என்று டுவிட்டரில் நடிகர் கமல் தெரிவித்துள்ளார். மேலும் அக்டோபர் இறுதி வரை, அனைத்து சனிக்கிழமைகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.