சினிமா செய்திகள்

2.0 வில் எமிஜாக்சன் முதல் போஸ்டர் வெளியீடு + "||" + Amy Jackson's first look in Rajinikanth's 2.0 out - See pic

2.0 வில் எமிஜாக்சன் முதல் போஸ்டர் வெளியீடு

2.0 வில் எமிஜாக்சன் முதல் போஸ்டர் வெளியீடு
2.0 வில் எமிஜாக்சன் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படம் முழுக்க 3 டி தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 2018-ல் இந்த படத்தை வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் படத்தின் கதாநாயகி எமிஜாக்சனின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். ரோபோ தோற்றத்தில் எமிஜாக்சன் பிகினி உடையில் இருக்கும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.