சினிமா செய்திகள்

அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை விஷால் எச்சரிக்கை + "||" + More than the government-appointed fee Additional chargeable theaters Action on Vishal warning

அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை விஷால் எச்சரிக்கை

அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை விஷால் எச்சரிக்கை
அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 திரையரங்குகளில் புதிய விதிமுறைகளை விஷால் பின்பற்ற சொல்லி கோரிக்கை வைத்துள்ளார், இவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

திரையரங்குகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என நடிகர் விஷால் அறிவுறுத்தியுள்ளார்.

கேண்டீன்களில் விற்கப்படும் பொருட்களில் அச்சிடப்பட்ட விலையை மட்டுமே வாங்கவேண்டும் என்றும், திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது.

மக்களை குடிநீர் கொண்டு வர  அனுமதிக்க வேண்டும்.

மேலும், அனைத்து திரையரங்குகளிலும் தனியார் நிறுவனங்களின் குடிநீரை விற்காமல் அம்மா குடிநீர் பாட்டில்கள் விநியோகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அவர், புதிய விதிகளை பின்பற்றாத தியேட்டர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ரசிகர்களின் சிரமம் கருதி விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும் என விஷால் தெரிவித்துள்ளார்.