சினிமா செய்திகள்

விஷால் உள்பட அனைத்து நடிகர்களும் சம்பளத்தை குறைக்க தயாரா? கேள்வி எழுப்ப தயாராகும் திரையரங்க உரிமையாளர்கள் + "||" + Are all actors including Vishal ready to reduce salary? The question is ready to raise Theater owners

விஷால் உள்பட அனைத்து நடிகர்களும் சம்பளத்தை குறைக்க தயாரா? கேள்வி எழுப்ப தயாராகும் திரையரங்க உரிமையாளர்கள்

விஷால் உள்பட அனைத்து நடிகர்களும் சம்பளத்தை குறைக்க தயாரா? கேள்வி எழுப்ப தயாராகும்  திரையரங்க உரிமையாளர்கள்
திரையரங்குகளில் புதிய விதிமுறைகளை பின் பற்ற வேண்டும் என கூறும் விஷால் உள்பட அனைத்து நடிகர்களும் சம்பளத்தை குறைக்க தயாரா?என கேள்வி எழுப்ப தயாராகும் திரையரங்க உரிமையாளர்கள்.
சென்னை

திரையரங்குகளில் புதிய விதிமுறைகளை பின் பற்ற வேண்டும் என விஷால் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கோரிக்கை வைத்து இருந்தார். 

அவர் தனது கோரிக்கையில் ,

திரையரங்குகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். மல்டிப்ளக்ஸ் வளாகங்களில் உள்ள தியேட்டர்களில் மணிக்கணக்கில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது .தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் அரசு நிர்ணயித்தபடி வசூலிக்கப்பட வேண்டும். அம்மா தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்ய வேண்டும், "தண்ணீர் கொண்டு வர ரசிகர்களுக்கு அனுமதி தேவை. கேண்டீன்களில் விற்கப்படும் பொருட்களில் அச்சிடப்பட்ட விலையை மட்டுமே வாங்கவேண்டும். என கோரி இருந்தார்.

இதை தொடர்ந்து  திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. விஷால் உட்பட அனைத்து நடிகர்களும் சம்பளத்தை குறைக்க தயாரா? என திரையரங்க உரிமையாளர்கள்  கேள்வி எழுப்பத் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும்  என அபிராமி ராம்நாதன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மல்டிபிளக்ஸ் உட்பட அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் ஆலோசனையில் பங்கேற்பார்கள் என கூறி உள்ளார்.